Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2025
  • குற்றம் புதிது திரை விமர்சனம்
  • News

குற்றம் புதிது திரை விமர்சனம்

admin August 30, 2025

போலீஸ் உதவி ஆணையர் சத்யா (மதுசூதனன் ராவ்) மகள் பிரீத்தி (சேஷ்விதா கனிமொழி) ஒரு நாள் இரவு தந்தையிடம் கைபேசியில் பேசும் போது ஆட்டோவில் வீட்டிற்கு வருவதாக தகவல் தெரிவிக்கிறார். அடுத்த நாள் காலை தந்தை மகளுக்கு தேனீர் கொடுக்க அவளது ரூமுக்கு சென்று பார்க்கும் மகள் இரவு வீடு திரும்ப வில்லை என்பதை அறிகிறார். காணாமல் போன மகள் பிரீத்தியை போலீஸ் தீவிரமாக தேடும் போதுஇ ஒரு வீட்டின் அருகில் உள்ள ஆட்டோவில் ரத்தகறைகள் இருப்பதாக தகவல் கிடைக்க அங்கு போலீஸ் படை விரைகிறது. வீட்டின் மாடியில் குடி இருக்கும் ஆட்டோ ஓட்டுனர் விநாயகம் ரூமில் ரத்த கறைகள் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் அங்கு பிரீத்தியின் கைபேசி மற்றும் அறுபட்ட கை விரல் இருப்பதை கண்டு பிரீத்தி கடத்திஇ கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து ஆட்டோ ஓட்டுநர் விநாயகம் பற்றி விசாரணை செய்கிறார்கள். பக்கத்து ரூமில் குடி இருக்கும் உணவு விநியோகம் செய்யும் கதிரேசன் இடமும் (தருண் விஜய்) விசாரணை செய்கிறார்கள். கதிரேசனை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரணை செய்த பின் அவன் குற்றவாளி இல்லை என்று அனுப்பி விடுகிறார்கள். காவல்துறை இந்த கொலையை ஆட்டோ ஓட்டுநர் விநாயகம் தான் கொலை செய்திருப்பான் என்று முடிவு செய்து அவனை தேடும் வேட்டையில் போலீஸ் இறங்குகிறது.சில நாட்கள் கழித்து திடீரென்று கதிரேசன் மன அழுத்தத்துடன் போலீஸ் நிலையம் வந்து அந்த கொலையை நான்தான் செய்தேன் என்று கூறி சரண்டர் ஆகிறார். இந்த பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தாக கூறுகிறான். மேலும் இன்னும் 2 கொலை செய்து இருக்கிறேன். அது ஒருவர் கணக்கு ஆசிரியை மற்றொருவர் எனது கல்லூரி நண்பன் என தெரிவிக்கிறார். காவல்துறை கதிரேசன் கூறிய தகவல் படி விசாரணை செய்யும் போது, அவர் கொலை செய்ததாக சொல்லப்பட்ட கணக்கு ஆசிரியை மற்றும் அவரது நண்பன் இரண்டு பேரும் உயிருடன் இருப்பதை கண்டுபிடிக்கிறது. மேலும் அவனை பற்றி விசாரிக்கும் போது அவனை பற்றி நல்ல விதமான தகவல்கள் மட்டும் அவர்களுக்கு கிடைக்கிறது. கோர்ட்டில் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படும் கதிரேசனை சிகிச்சைக்கு அனுப்பி சரியாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி நீதிபதி தேதி குறிப்பிட்டு கேஸை ஒத்திவைக்கிறார். இந்நிலையில், இறந்ததாகக் கூறப்பட்ட பிரீத்தி ஒரு சில நாட்களுக்குப் பிறகு உயிரோடு மீட்கப்படுகிறார். மர்மமான முறையில் துண்டிக்கப்பட்ட கை விரலுடன் காயத்துடன் மீண்டும் தோன்றும்போது, வழக்கு ஒரு குழப்பமான திருப்பத்தை எடுக்கிறதுஇ இது காவல்துறையினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அவள் திரும்பி வருவது சட்டம் மற்றும் தர்க்கத்தின் அடித்தளத்தையே சவால் செய்வது மட்டுமல்லாமல்இ உண்மை மற்றும் யதார்த்தத்தின் தன்மையை அனைவரும் கேள்வி கேட்க வைக்கிறது. அதன் பின் கதிரேசன் குற்றமற்றவர் என்று கோர்ட் முடிவு செய்து அவரை விடுவிக்கிறது. உண்மையில் நடந்தது என்ன? தலைமறைவான ஆட்டோ ஓட்டுநர் விநாயகம் என்ன ஆனார்? கதிரேசன் தான் இந்த கொலையை செய்தேன் என்று ஏன் கூறினார்? பிரீத்திக்கும் கதிரேசனுக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கு அதிர்ச்சியூட்டும் திருப்பங்களுடன் பதிலளித்து உச்சக்கட்டத்தில் குற்றம் புதிது பாகம் 2 க்கான லீடுடன் முடிகிறது

Post navigation

Previous பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது
Next பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ சௌகரியம், மற்றும் நீடித்த உழைப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன் நான்கு புதிய தயாரிப்பு அணிவரிசைகள் அறிமுகம்

Related Stories

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai
  • News

Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai

April 24, 2026
ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai
  • News

Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai

April 24, 2026
ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.