Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஜென் Z (GEN Z) தலைமுறையின் வேகமான வளர்ச்சிக்கு ஏற்ற வெற்றிக்கான பாதை ,  சஃபல்தா கா ராஸ்தா சீசன் 5 – நிகழ்ச்சி ஷரானி பொன்குரு தலைமையில் நடைபெற்றது

Posted on August 20, 2025

ஜென் Z (GEN Z) தலைமுறையின் வேகமான வளர்ச்சிக்கு ஏற்ற வெற்றிக்கான பாதை ,  சஃபல்தா கா ராஸ்தா சீசன் 5 – நிகழ்ச்சி ஷரானி பொன்குரு தலைமையில் நடைபெற்றது.

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, நாராயணா கல்வி நிறுவனங்களிலிருந்து GEN Z தலைமுறைக்கான   பரிமாற்ற பயணம் ஆகும். ஜென் Z முந்தைய தலைமுறையினரிடமிருந்து மிகவும் வேறுபட்டது.  ஏனெனில் அவர்கள்  வேகமாக மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும்  சமூக விழிப்புணர்வுள்ள உலகில் வளர்ந்து வருகின்றனர்.  இதைக் கருத்தில் கொண்டு, நாராயணா கல்வி நிறுவனங்களின் குழு,  சஃபல்தா கா ராஸ்தா அதாவது வெற்றிக்கான பாதை- சீசன் 5 ஐ ஆக்கப்பூர்வமாகவும், பிரமாண்டமாகவும் நடத்தியது. 

பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த  மாணவர்களிடையே உரையாற்றிய, ஆசியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான  நாராயணா  குழுமத்தின் இயக்குநர், டாக்டர். ஷரானி பொன்குரு,  சஃபல்தா கா ராஸ்தா  திட்டம் நாராயணா கல்விக் குழும மாணவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.   இதுபோன்ற நிகழ்ச்சிகளை பல்வேறு மாநிலங்களில் நடத்தி வருவதாகவும் இதுவரை 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்நிகழ்சி வாயிலாக சந்தித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். முதன்முறையாக  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1400 மாணவர்கள் பங்கேற்று, மிகச்சிறந்த வரவேற்பு அளித்தனர் என்றும் ஷரானி பொன்குரு தெரிவித்தார்.  

இந்த கருத்தாக்கத்தின் பின்னணி குறித்து பேசிய அவர், மாணவர்களில் குறிப்பாக,  10 ஆம் வகுப்பு பயில்பவர்களுக்கு  நிறைய மன அழுத்தம், பதட்டம் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் உள்ளதாகவும்,  இந்த நிகழ்வின் மூலம் நேர்மறை சிந்தனைகளை விதைத்து, தெளிவும் நன்றியுணர்வும் உள்ளிட்ட நுட்பங்களை ஒருங்கிணைப்பதாகவும்  அதன் மூலம் மாணவர்களின் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நாராயணா குழுமம் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை என்றும் வாழ்க்கைத் திறன்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் குழந்தைக்கு ஒட்டுமொத்த சமநிலையை உருவாக்க  பணியாற்றுவதை உறுதிசெய்கிறோம் என்றும் அவர் விளக்கினார்.  இது போன்ற ஒரு நிகழ்வு மன அழுத்தத்தைத் தணிக்கும். மேலும் மாணவர்கள் தங்கள் முழு திறனையும் அடைய உதவும்.  சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கவனச்சிதறல்கள் மாணவர்களை ஆக்கிரமிக்கின்றன என்றும் அவர்களுக்கு அமைதி தேவை என்றும் ஷரானி பொன்குரு எடுத்துரைத்தார். 

மாணவர்கள் மத்தியில் மிகவும் ஈர்க்கக்கூடியதாக அமைந்த இந்த நிகழ்ச்சி, ஷரானி பொன்குருவின் சக்திவாய்ந்த உரையால் சிறப்புப் பெற்றது. நடைமுறை வாழ்க்கை நுட்பங்களை அவர்,  எளிமையான, புரிந்துகொள்ளக்கூடிய முறையில் வெளிப்படுத்தினார்.    இந்த அமர்வு, முழு அரங்கையும் தீவிரமாக ஈடுபாடு கொள்ளச் செய்தது மற்றும் உற்சாகமாக வைத்திருந்தது.

தேர்வு பயத்தை சமாளிப்பது, இலக்குகளை அமைப்பது, நோக்கங்களை உருவாக்குவது மற்றும் உறுதித் தன்மையை வளர்ப்பது, அவர்களின்  உடனடி எதிர்பார்ப்பை சீரமைப்பது குறித்து மாணவர்களுக்கு ஷரானி வழிகாட்டினார். 

 தன்னுடைய வாழ்க்கையிலேயே,  தனது புத்தகத்தின் பிரமாண்டமான வெளியீட்டிற்கு பத்து நாட்களுக்கு முன்பு கடுமையான தொண்டை புண்ணால் பாதிக்கப்பட்ட நிலையை அவர் எவ்வாறு எதிர்த்துப் போராடினார் என்பதையும், நோக்கம்-அமைத்தல் மற்றும் உறுதியான முயற்சியின் மூலம், சவாலை அவர் எப்படி வெற்றிகரமாக மாற்றினார் என்பதையும் ஷரானி விவரித்தார்.  தன்னுடைய இளம் வயதில் அதிக எடையுடன் இருந்ததால், வெட்கப்பட்டு,  தன்னம்பிக்கை இழந்த போது,  தனது சொந்த சவால்களையும், பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவர் எவ்வாறு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார் என்பதையும் ஷரானி பகிர்ந்து கொண்டார்.  அவரது பேச்சு டிரீமர்(Dreamer), லீடர்(Leader), கனெக்டர்(Connector) மற்றும் ஃபைட்டர்(Fighter)  போன்ற பல்வேறு முன்மாதிரிகளின் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டியது.  

சஃபல்தா கா-ராஸ்தா-வெற்றிக்கான பாதை-சீசன் 5 என்பது மாணவர்களுக்கு கல்வி ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் தயாராவதற்கு உதவுவதன் மூலம் அவர்களுக்கு  அதிகாரம் அளிக்கும் பாதையில் ஷரானி பொன்குருவின் பணியில் ஒரு மைல்கல்லாகும்.  ஒன்றிணைக்கும் அமர்வுகள் மூலம், நம்பிக்கையுடனும் தெளிவுடனும் தேர்வுகளை எதிர்கொள்ள இளம் மனங்களை ஊக்கப்படுத்தி, வெற்றிகரமான கல்வி பயணத்திற்கு சரியான பாதை அமைக்க வழிகாட்டி வருகிறார் ஷரானி. 

இந்த திட்டம் என்எல்பி, ஹிப்னாஸிஸ், காட்சிப்படுத்தல் மற்றும் பிரதிபலிப்பு போன்ற சக்திவாய்ந்த நுட்பங்களை கலந்து, கற்றல் மற்றும் நீடித்த வெற்றிக்கான முழுமையான பாதையை உருவாக்கியது.  அவரது தனித்துவமான அணுகுமுறை நவீன உலகிற்கு அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கிறது.  இது மனநிலை தேர்ச்சி, தெளிவு மற்றும் விரும்பி வாழ்வதற்கான தொனியை அமைக்கிறது.

  • தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும்
  • *இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி?
  • முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய் விட்டாயா???
  • ஆழ்ந்த இரங்கல்களை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.- சீனு ராமசாமி.
  • தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு – இரங்கல் அறிக்கை
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme