Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2025
  • அகண்டா 2 தாண்டவம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார் காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா !!
  • News

அகண்டா 2 தாண்டவம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார் காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா !!

admin August 8, 2025

காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta), 14 ரீல்ஸ் பிளஸ் (14 Reels Plus), M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 அகண்டா 2: தாண்டவம் பட டப்பிங்கை முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்கு வெளியாகிறது.

‘காட் ஆஃப் தி மாஸஸ்’ நந்தமூரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu) கூட்டணி, நான்காவது முறையாக இணைந்து, மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிக வரவேற்பைப் பெற்ற ‘அகண்டா 2 : தாண்டவம்’ படத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது போஸ்ட்-புரொடக்‌ஷன் கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகச்சிறந்த தொழில்நுட்பத் தரத்தில், பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் கீழ் ராம் அச்சந்தா (Raam Achanta) மற்றும் கோபிசந்த் அச்சந்தா (Gopi Achanta) இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை, M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) பெருமையுடன் வழங்குகிறார். திரையரங்க வெளியீடு வேகமாக நெருங்கி வருவதால், மீதமுள்ள அனைத்து போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகளையும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்க படக்குழு அயராது உழைத்து வருகிறது.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே இணையத்தையே பரபரப்பாக்கியுள்ளது. நந்தமுரி பாலகிருஷ்ணா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய அவதாரத்தில் மிரட்டலான தோற்றத்தில் தோன்றி, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளார். படத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

டோலிவுட்டின் அதிர்ஷ்ட தேவதை எனக் கொண்டாடப்படும் நடிகை சம்யுக்தா (Samyuktha) மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பன்முகத் திறமை கொண்ட ஆதி பினிசெட்டி ( Aadhi Pinisetty) இப்படத்தில் தீவிரத்தையும் ஆழத்தையும் கொண்டு வரும், கதையில் தனித்து நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஹர்ஷாலி மல்ஹோத்ரா (Harshali Malhotra) ஒரு முக்கிய வேடத்தில் டோலிவுட் அறிமுகமாகிறார்.

மிகச்சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றும், அகண்டா 2: தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் S. தமன் அற்புதமான இசையை வழங்குகிறார், C. ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். தம்மிராஜு எடிட்டிங் செய்கிறார், மேலும் அகண்டாவின் உலகத்தை கலை இயக்குநர் A.S. பிரகாஷின் அற்புதமான அரங்க அமைப்புகளால் உயிர்ப்பித்துள்ளார்.

படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், படத்தின் விளம்பர பணிகளைத் தீவிரப்படுத்தத் தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர், தொடர்ந்து புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்கள்.

நடிகர்கள்: காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி பினிசெட்டி, ஹர்ஷாலி மல்ஹோற்றா

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் : போயபதி ஸ்ரீனு தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா
பேனர் : 14 ரீல்ஸ் பிளஸ்
வழங்குபவர் : M தேஜஸ்வினி நந்தமூரி
இசை: தமன் எஸ்
ஒளிப்பதிவு : C ராம்பிரசாத், சந்தோஷ் D டெடகே
நிர்வாக தயாரிப்பாளர்: கோடி பருச்சுரி
கலை: A.S.பிரகாஷ்
எடிட்டர்: தம்மிராஜு
ஸ்டண்ட் : ராம்-லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Post navigation

Previous On the Auspicious Occasion of Varamahalakshmi Festival, Hombale Films Unveils Rukmini Vasanth as ‘Kanakavathi’ in Kantara Chapter 1, Releasing Worldwide on October 2, 2025
Next God Of Masses Nandamuri Balakrishna Completes Dubbing For, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Presents #BB4 Akhanda 2: Thandavam, Theatrical Release On September 25th

Related Stories

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai
  • News

Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai

April 24, 2026
ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai
  • News

Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai

April 24, 2026
ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.