Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் என இருவரும் இணைந்து நடனமாடியுள்ள பாடல் “ஜனாபே ஆலி”, ரசிகர்கள் பெரிய திரையில் தான் கொண்டாட முடியும். இந்த பாடலின் சிறிய க்ளிம்ஸ் வீடியோ நாளை காலை வெளியாகிறது என யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்!

Posted on August 6, 2025

இந்திய சினிமாவில் தற்போது எதிர்பார்ப்பு மிகுந்த ஆக்‌ஷன் திரைப்படமாக வார் 2 உருவாகியுள்ளது. இந்திய சினிமாவில் உள்ள இரண்டு மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் நடிகர்களான ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்டிஆர் என இருவரிடையே உள்ள நடன போட்டியை பெரிய திரையில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என இன்று யஷ் ராஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த பாடலுக்கு ‘ஜனாபே ஆலி’ என பெயரிட்டுள்ளனர் . இது இந்திய சினிமாவில் இதுவரை யாரும் காணாத அளவிற்கு பிரமாண்டமான, புத்துணர்ச்சியான நடனக் காட்சியாக உருவாகியுள்ளது.

யஷ் ராஜ் நிறுவனம் ஜனாபே ஆலி பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை நாளை காலையில் வெளியிடுகின்றனர்.இதன் மூலம், முழு பாடலின் பிரமாண்டத்தை உணர்வதற்கு ஒரு ஆர்வத்தை தூண்டுகின்றனர்.

ஜனாபே ஆலி முழுப் பாடலை திட்டமிட்டு பெரிய திரையில் அனுபவிக்க உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் அந்த பாடலை காண வேண்டுமெனில், இந்த சுதந்திர தின வார இறுதியில் , திரையரங்குகளுக்கு வர வேண்டும்.

யஷ் ராஜ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்த பதிவின் படி” ‘ நடன மேடையிலும் வார் இருக்கும்’ .நாளை, ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இருவரிடையேயான நடன மோதலின் காட்சியை ஒரு சிறு க்ளிம்ஸ் வீடியோவில் காணுங்கள். ஆனால், முழுப்பாடலைப் பார்க்க முடியுமென்றால் அது பெரிய திரையில் மட்டும் தான். “

வார் 2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ந் தேதியன்று உலகமெங்கும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ள படமாக வார் 2 தயாராகியுள்ளது, ஆக்‌ஷன் மட்டுமல்லாமல், இப்போது ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடையேயான நினைவில் நீங்காத நடன மோதலையும் கொண்டு திரைக்கு வருகிறது.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme