இன்றைய நாகரீக உலகில் மனிதர்களின் உணர்வுகளையும் பாசத்தையும் நேசத்தையும் குடும்பங்களோடு ஒன்றிணைத்து குடும்ப காவியமாக உசுரே திரைப்படம் வெள்ளி திரையில் வெளியாகி உள்ளது .
கிராமத்தில் புதிதாக குடியேறும் அம்மா மந்திரா மற்றும் மகள் ரஞ்சனா (ஜனனி). அங்கே வசிக்கும் ராகவா (DJ) ரஞ்சனாவை பார்த்தவுடன் காதலிக்கிறான். தொடக்கத்தில் அவள் எதிர்ப்பைத் தெரிவித்தாலும், பின்னர் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். ஆனால், இந்த காதல் மந்திராவுக்கு தெரியவர, கண்ணேற்றம், கோபம், சமூக அவமானம் என அனைத்தும் ஒன்றாக வெடிக்கின்றன. மகளை வேறொரு ஊருக்கு அனுப்பிவைத்து பிரிக்க முயல்கிறாள். ராகவா காதலுக்காக பயணம் செய்கிறான். அவர்களின் உண்மை காதல் வெற்றி பெற்றதா என்பது படத்தின் மீதி கதை.