Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

JITO CHENNAI PRESENTSPAGARIYA -JBN BUSINESS CONCLAVE 2025 தொடக்கவிழாவில், தலைமை விருந்தினர்களாக A2B மேலாண் இயக்குனர் திரு.K.T. ஸ்ரீனிவாச ராஜா, பால்ஸன்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. டாக்டர் எஸ். ஆர். சாம் பால் ஆகியோருடன் JITO உயர்மட்ட பிரமுகர்கள், திரு.D.K. ஜெயின், திரு. ஜிதேந்திர பண்டாரி திருமதி. சோனாலி டுகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Posted on July 18, 2025

வணிகம், தொழில் முனைவோர் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றின் நகரத்தின் மிகவும் ஆற்றல்மிக்க கொண்டாட்டங்களில் ஒன்றாக PAGARIYA -JBN BUSINESS CONCLAVE 2025 நடத்தப்படுகிறது.

ஆடம்பர நகைகள், ஃபேஷன், வீட்டு அலங்காரம், மரச்சாமான்கள், சமையல் பொருட்கள், உலோக பொருட்கள், பரிசு வகைகள் உள்ளிட்ட 60 – க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளுடன் – இந்த மாநாடு வர்த்தகம், ஒன்றிணைவு மற்றும் ஒத்துழைப்புக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

தொழில்முனைவோராக இருந்தாலும், ஸ்டார்ட்- அப் ஆர்வலராக இருந்தாலும், மணமகளாக இருந்தாலும், அல்லது உத்வேகம் மற்றும் பிரீமியம் பிராண்டுகளைத் தேடும் நபராக இருந்தாலும், உங்களுக்கு இந்த நிகழ்வு அதிகபட்ச வணிக பரிமாற்றத்தை உறுதியளிக்கிறது.

இந்த நிகழ்ச்சியை தி டாட் அண்ட் டாட்டர், ஸ்டிக்கர்ஸ் இந்தியா மற்றும் பிரைம் ஈவன்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் வழங்கின. மேலும்
திரு.ஆகாஷ் குமார், திரு. அங்கித் சிரோயா, திரு. குணால் ஜெயின் மற்றும் ஜே.பி.என் கமிட்டி ஆகியோரின் ஆதரவுடன் திரு.ராஜேஷ் சந்தன் மற்றும் திரு.ஸ்ரேஜுஸ் கோத்தாரி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நெட்வொர்க் இஸ் நெட்வொர்த் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இந்த வணிக மாநாடு பிரமாண்டமான தொடக்கதுடன் உருவாக்கப்பட்டது.

சிறப்பு நிகழ்வாக, வணிக வாய்ப்பு உருவாக்குபவர் ( பிசினஸ் ஆப்பர்சூனிட்டி கிரியேட்டர்)(BOC) யை, அரிஹந்த் அறக்கட்டளை, அட்வான்ஸ்டு கிரோஹேர் மற்றும் பென்சில் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்றது.

மலாவி குடியரசின் கௌரவ தூதர் திரு. வினோத் ஷர்மா, சீஷெல்ஸ் குடியரசின் கௌரவ தூதர் திரு.எம்.சேஷா சாய் மற்றும் மியான்மார் நாட்டின் கௌரவ தூதர் பேராசிரியர், டாக்டர். ரங்கநாதன், திரு. சிராக் கபூர் உள்ளிட்ட மதிப்புமிக்க விருந்தினர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஜே. பி.என் நிகழ்வு குழுவிற்கு, ஜிட்டோ சென்னையின், தினேஷ் தர்தா, அக்சாய் ஓஸ்த்வால், ராஜேந்திர மொமயா, ஹேமந்த் ஜெயின், ரோனக் மேத்தா, பிரதிக் சிங்வி, கவுரவ் சோப்ரா, நிமிஷ் ஜெயின், நிவேஷ் ஜெயின், யாஷ் ஜெயின், அக்ஷய் சிங்வி, கிருஷாலி பாகடியா, கவிதா சேத்தியா, மம்தா முத்தா, பிரியங்கா ஜெயின் ஆகியோர் தங்களது நன்றியை பகிர்ந்து கொண்டனர்.

  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
  • தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து டெல்லியுடன் போராடும் நிலையில், மகுடஞ்சாவடியில் உள்ள இலவச பயிற்சி மையம் நீட் தேர்வில் சாதனை!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme