Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

‘பரமசிவன் பாத்திமா’ இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கதைநாயகனாக நடிக்கும் ‘ஆட்டி’

Posted on July 1, 2025

சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் பெற்ற படம் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் அதில் கதாநாயகனுக்கு இணையான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

தற்போது ‘ஆட்டி’ என்கிற படத்தில் கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இசக்கி கார்வண்ணன்.

‘மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டுவின் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் தயாரித்துள்ளார்.

அயலி புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்திய
கதையாக இது உருவாகியுள்ளது. குறிப்பாக வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழின குல தெய்வங்கள் பற்றி விரிவாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது.

ஊட்டி, குன்னூர் பகுதியைச் சுற்றியுள்ள, இதுவரை சினிமாக்காரர்கள் கால் பதித்திராத வனப்பகுதிகளிலும் மற்றும் காரைக்குடியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

விரைவில் வெளியாகும் விதமாக தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு ; லட்சுமி கிரியேஷன்ஸ் * இசக்கி கார்வண்ணன்

இயக்கம் ; தி . கிட்டு

இசை ; தீசன்

ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்

படத்தொகுப்பு ; சி.மு இளங்கோவன்

கலை ; முஜிபுர் ரகுமான்

மக்கள் தொடர்பு ; A ஜான்

  • ”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!
  • Sumithra Devi — From Kannagi to Keerthi
  • இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்”- நடிகை சுமித்ரா தேவி!
  • இருமுடி கட்டு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme