Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

*SUNDAY SMASH LEAGUE – பிக்கிள் பால் திருவிழா!*

Posted on June 18, 2025

*SUNDAY SMASH LEAGUE – பிக்கிள் பால் திருவிழா!*

*Ballpark Padel Club-க்காக Ceri Digital நடத்திய சண்டே ஸ்மாஷ் லீக்!*

*திரை பிரபலங்களின் பங்கேற்பில் நடைபெற்ற பிக்கிள் பால் திருவிழா!*

இந்த ஞாயிறு, சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு ஞாயிறு திருவிழாவாக அமைந்தது. Ballpark Padel Club-க்காக, திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்ட PickleBall போட்டிகளை, Ceri Digital நிறுவனம், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை, ரசிகர்களின் உற்சாகத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியது.

டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் என இரண்டையும் கலந்த பிக்கிள் பால் விளையாட்டு, இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மேலும் பரப்பும் நோக்கில் Ballpark Padel Club இந்தியா முழுவதும் பல நகரங்களில் அரங்குகளை அமைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, Ceri Digital சார்பில் இந்த ஞாயிறு சென்னை நிகழ்வு நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக,
நடிகை கௌரி கிஷன், தேஜு அஷ்வினி, பிக்பாஸ் புகழ் அனன்யா ராவ், ஐரா, VJ பிரதூ, சுழல் 2 புகழ் ரினி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் வீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டு அதன் பின்னர், 16 வீரர்கள் நான்கு அணிகளாக (A, B, C, D) பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆட்டங்களின் வரிசை A vs B, C vs D, A vs C, B vs D, A vs D, B vs C என ஆட்டங்கள் நடைபெற்றன. இவையுடன், முன்னேறிய நான்கு அணிகள் இடையே அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இறுதியாக வெற்றி பெற்ற இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.

நிகழ்ச்சியின் இடையே பிரபலங்களின் உரைகள், ரசிகர்களுக்கான கேம்கள், புகைப்பட தருணங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. குறிப்பாக, Celebrity vs Celebrity Doubles போட்டி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

நிகழ்ச்சி இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு Best Team, MVP (Most Valuable Player), மற்றும் Fan Favorite Celebrity ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த சண்டே ஸ்மாஷ் லீக், சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் திருவிழாவாகும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

  • ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !
  • அப்பாவை இழந்த பின் செய்வதறியாதுதிகைத்து நிற்கும் நான், முறையாக ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேனே நடிகர் சாந்தனு!!!
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில்
  • Bhagwan Mahaveer Foundation Invites Nominations from Tamil Nadu for the 30th National Mahaveer Awards
  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme