Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2025
  • வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’ – அனைதா ஷ்ராஃப் அடஜானியா

வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’ – அனைதா ஷ்ராஃப் அடஜானியா

admin June 18, 2025

*வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’ - அனைதா ஷ்ராஃப் அடஜானியா*

இந்திய சினிமாவில் உள்ள சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஹிருத்திக் ரோஷன் .வார் 2 டீசரில் அவரின் வசீகரமான திரை ஈர்ப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.பிளாக்பஸ்டர் படங்களை மட்டுமே வழங்கி வரும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் இந்த யுனிவர்ஸில் வார் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹிருத்திக் ஸ்பை வேடத்தில் நடித்துள்ளார்.

வார் 2 படத்தின் ஆடை வடிவமைப்பாளர் அனைதா ஷ்ராஃப் அடஜானியா கூறுகையில் “யாஷ் ராஜ் பிலிம்ஸ் வார் 2 டீசரை வெளியிட்ட பின்னர் ஹிருத்திக் ரோஷனின் தோற்றம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .ஹிருத்திக்கின் இந்த காந்த ஈர்ப்பு மேலும் ரசிகர்களை கவரும் “என்று கூறியுள்ளார் .

மேலும் அனைதா கூறுகையில் , “ கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து ஹிருத்திக்குடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தூம் 2, பேங் பேங் மற்றும் எண்ணற்ற தோற்றங்கள் மற்றும் விளம்பரங்கள், அதையடுத்து வார் படம் வந்தது. ஒவ்வொரு படத்திலும் புதிதாக மற்றொரு புதிய லுக்கை கொண்டு வந்தோம் . ஆனால் வார் 2 படம் மூலம், நாங்கள் அவருக்கு ஒரு சிறப்பான ,நேர்த்தியான தோற்றத்தை உருவாக்கினோம். அது இன்னும் ஒரு சூப்பர் ஹீரோவைப் போல இருந்தது .

வார் 2 படத்திற்காக கபீரின் கதாபாத்திரத்தின் ஆழமான, இருண்ட மனநிலையை ஆராய்வது அவசியமாக இருந்தது .இந்தப் படத்தில் அவர் பல தன்மைகளை கொண்டவர்.உணர்ச்சி ரீதியாக மட்டுமல்ல, பார்வை ரீதியாகவும் கூட . கபீரின் கூர்மையான தோற்றம் எப்போதும் தனித்து தெரியும்.

அனைதா மேலும் கூறுகையில், “நாங்கள் வார் 1 இல் ஹ்ரித்திக்கின் தோற்றத்திற்கு கிடைத்தை வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு அந்த மாற்றத்தை ஏற்படுத்திய முடி வெட்டு, ஹ்ரித்திக்கின் கவர்ச்சிகரமான ஆளுமையை முன்னெடுத்து இந்த படத்தில் புதிய தோற்றத்தை உருவாக்கினோம் .இந்த தோற்றம், மனோபாவம், கட்டுப்பாடு ஆகியவற்றின் கலவையே வார் 2 இல் இந்த கபீரை உண்மையாக உருவாக்கியது என்று நான் நினைக்கிறேன்.” என இவ்வாறு கூறியுள்ளார் .

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார் . கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். வார் 2 இவ்வருட ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Post navigation

Previous *’மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா*
Next ‘We have tried to push Hrithik’s magnetic presence even further while styling his character in War 2!’ : Anaita Shroff Adajania

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

வணக்கம் உங்களில் ஒருவனாக வாக்களிக்க காத்திருக்கும்  திரைப்பட இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!! 
  • News

வணக்கம் உங்களில் ஒருவனாக வாக்களிக்க காத்திருக்கும்  திரைப்பட இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!! 

April 20, 2026
அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!
  • News

அரசியல் தலைவர்கள் பாராட்டிய ‘பிச்சை’ குறும்படம்!

April 20, 2026
Mr X movie review
  • Movie Review
  • Reviews

Mr X movie review

April 19, 2026
GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை
  • News

GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

April 19, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.