Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2025
  • மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ மருத்துவமனையின் CSR பிரச்சாரத்திற்கு திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா ஆதரவு*
  • News

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ மருத்துவமனையின் CSR பிரச்சாரத்திற்கு திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா ஆதரவு*

admin June 15, 2025

*

அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை வழங்கி உள்ளார்.

நாடு முழுவதும் 23 நகரங்களில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படும். இதில் அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பொறுப்பேற்க ஊக்குவிப்பதும் தான் இந்த CSR பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

ஹைதராபாத், ஜூன் 11, 2025: சுகாதார துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள FUJIFILM இந்தியா, அப்போலோ மருத்துவமனை அறக்கட்டளையின் CSR பிரிவின் துணைத் தலைவர் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா முன்னிலையில் , ”முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்” ( Find It Early, Fight It Early) எனும் அதன் சமீபத்திய CSR பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி மார்பக புற்றுநோய் மற்றும் அதன் ஆரம்ப கால நோய் பாதிப்பினைக்கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் நடைபெறாத அல்லது எதிர்மறையான- நியாயமற்ற நம்பிக்கைகளை கொண்டிருக்கும் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் 23 நகரங்களில் செயல்படுத்தப்படும். கட்டமைக்கப்பட்ட சமூக ஈடுபாடு – சுகாதார இடர் மதிப்பீடுகள் மற்றும் உணர்திறன் முயற்சிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் இந்த பிரச்சாரம், இதற்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற களக் கல்வியாளர்களால் வழிநடத்தப்படும். அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை ( ATNF) செயல்படுத்தும் இந்த திட்டம், அதிக அளவில் தகவல்களை அறிந்த மற்றும் சுகாதார விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான FUJIFILM இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

மார்பக புற்றுநோய் இந்திய பெண்களிடையே மிகவும் பரவலாக காணப்படும் புற்று நோய்களில் ஒன்றாகும். ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின் படி, பெண்களிடையே கண்டறியப்பட்ட அனைத்து வகையான புற்று நோய்களிலும் இது தோராயமாக 14 சதவீதம் ஆகும். மேலும் 29 பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் உருவாகும் அபாயமும் உள்ளது. துரதிஷ்டவசமாக இது பற்றிய அறியாமை , விழிப்புணர்வு இன்மை, சரியான நேரத்தில் நோயை கண்டறிவதற்கான வசதிகள் எளிதில் கிடைக்காதது மற்றும் பராமரிப்பு கிடைக்காததால்.. பெரும்பாலான வழக்குகள்.. நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.‌ ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்” என்பது சமூகத்தில் நம்பகமான, கலாச்சார ரீதியாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வழங்குவதன் மூலம், இந்த சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் – விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமர்வுகள் மூலமும் மரியாதையுடன் கூடிய திறந்த நிலையிலான உரையாடல்களை நிகழ்த்தி எளிதாக்குவதன் மூலம் .. இந்த முயற்சி பெண்கள் தங்களின் உடல் நலம் குறித்து மிகவும் விழிப்புணர்வுடனும் முன் முயற்சியுடனும் செயல்பட ஊக்குவிக்கிறது. ஆரம்பக் கட்ட அறிகுறிகளை அறிந்து கொள்வது மற்றும் கண்டறிவது, சுய பரிசோதனைக்கான நுட்பங்களை புரிந்து கொள்வது மற்றும் சரியான தருணத்தில் முழுமையான மருத்துவ ஆலோசனையை பெறுவது உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும்.‌

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா பேசுகையில், ”சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாங்கள் நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன் மட்டுமல்லாமல், அது குறித்த விழிப்புணர்வு , கல்வி, எளிதில் அணுகும் முறை ஆகியவற்றை வழங்கும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. மார்பக புற்றுநோய் தொடர்ந்து உயிர்களை கொன்று வருகிறது. ஏனெனில் பல பெண்களுக்கு இத்தகைய நோய் பாதிப்பை கண்டறிந்து முன்கூட்டியே செயல்படுவதற்கு தேவையான தகவல்களும், வசதிகளும் இல்லை. FUJIFILM இந்தியாவின் இந்த CSR முயற்சி அந்த யதார்த்தத்தை பற்றிய ஆழமான புரிதலை பிரதிபலிக்கிறது. மிகவும் முக்கியமான இடங்களில் அர்த்தமுள்ள நடவடிக்கை மேற்கொள்வதற்கும் , தாமதமாகிவிடும் முன் விழிப்புணர்வு தேவைப்படும் பெண்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கும் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டில் எங்களது ஆதரவு அடித்தளமாக உள்ளது என்றார்.

இது தொடர்பாக FUJIFILM இந்தியாவின் நிர்வாக இயக்குநரான திரு கோஜி வாடா தொடர்ந்து பேசுகையில், ” எங்களின் FUJIFILM இந்தியா, ‘ நம் உலகிற்கு மேலும் அதிகளவிலான புன்னகைகளை வழங்குதல்’ ( Giving Our World More Smiles) என்ற எங்கள் குழுவின் நோக்கத்தை உள்ளடக்கிய புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.‌ பல்வேறு ஆலோசனைகள், தனித்துவமான திறன்கள் மற்றும் அசாதாரணமான மக்களுடன் கலந்து கொள்வதன் மூலம் உலகிற்கு மகிழ்ச்சியையும் , புன்னகையும் தரும் தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல் ‘ எனும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு CSR பிரச்சாரத்தின் மூலம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்துவதையும், இதனால் இறக்கும் பல உயிர்களை காக்கும் வகையில் ஆரம்ப கால நோயறிதலை மேம்படுத்துவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்” என்றார்.

FUJIFILM இந்தியா தனது CSR முயற்சிகள் மூலம் பூர்த்தி செய்யப்படாத மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், ஆரம்பகால நோய் கண்டறிதலை ஊக்குவிப்பதன் மூலமும், கல்வி மூலமும், தடுப்பு மற்றும் பராமரிப்பை செயல்படுத்துவதன் மூலமும், சுகாதார பராமரிப்பை கூடுதலாக உள்ளடக்கியதாகவும் , எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றுகிறது. ‘முன்னரே கண்டறிதல், முன்னரே போராடுதல்’ என்ற FUJIFILM குழுமத்தின் நிலையான மதிப்பு 2030 ஆம் ஆண்டிற்கான திட்டத்துடன் ஒத்துப் போகிறது. இது குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற மக்களுக்கு சுகாதார சமத்துவம் மற்றும் ஆதரவிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த முயற்சி தேவைப்படும் இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் ‘நம் உலகிற்கு அதிக புன்னகையை வழங்குதல்’ என்ற எங்கள் நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. தொலைதூரம் உள்ள நகரமாக இருந்தாலும் அல்லது அடர்த்தியான நகர் புறமாக இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும், அதனை பாதுகாத்துக் கொள்ளவும், தனது ஒட்டு மொத்த நல்வாழ்விற்கான பொறுப்பினை ஏற்கவும், அதற்கான வாய்ப்பினை பெற தகுதியானவர் என FUJIFILM இந்தியா நம்புகிறது.

Post navigation

Previous *Ms. Upasana Kamineni Konidela, Vice Chairperson of CSR, Apollo Hospitals, has extended her support to the CSR campaign promoting breast cancer awareness.*
Next *ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Related Stories

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*
  • News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

April 18, 2026
KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*
  • News

KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*

April 18, 2026

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
ரூம் பாய் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

ரூம் பாய் திரை விமர்சனம்

April 18, 2026
சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*
  • News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

April 18, 2026
KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*
  • News

KRIA Hosts World IP Day 2026 Event on ‘IP & Sports’ in Chennai*

April 18, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.