Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பிளாக் திரை விமர்சனம்-indiastarsnow.com

பிளாக் திரை விமர்சனம்

Posted on October 10, 2024

ஜீவா – வசந்த், பிரியா பவானி சங்கர் – ஆரண்யா, விவேக் பிரசன்னா – மனோகர், யோகி ஜேபி – சிவராஜ், ஷா ரா – சுரேஷ், ஸ்வயம் சித்தா – பிரபா, சிந்தூரி – லலிதா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – கோகுல் பினோய், படத்தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்குநர் – சதீஷ் குமார், சண்டைப் பயிற்சி – மெட்ரோ மகேஷ், நடனம் – ஷெரிஃப், பாடல்கள் – மதன் கார்க்கி, மக்கள் தொடர்பு – ஜான்சன்.

பிளாக் படத்தின் ஆரம்ப காட்சிகளில் சூப்பர் மூன் நாளில் விசித்திரமான நிகழ்வு நடக்கிறது. 1964ல் காரில் பயணம் செய்யும் காதல் ஜோடியை அவர்களது நண்பன் மனோகர் (விவேக் பிரசன்னா) தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். அவர்களை அவனுடைய வீட்டில் விட்டு விட்டு வெளியே வரும் போது துப்பாக்கி சுடும் ஒசை கேட்க திரும்பி வீட்டிற்கு வரும் மனோகர் அங்கே காதல் ஜோடி இறந்து கிடப்பதும், அவர்களை கொன்றது யார் என்ற கோணத்தில் காட்சிகள் முடிவடைகின்றன. அதன் பிறகு இன்றைய காலகட்டத்தில் சூப்பர் மூன் நாளில் சென்னை புறநகரில் புதிதாக கட்டப்பட்ட தங்களுக்கு சொந்தமான கேடட் கம்யூனிட்டி வில்லாவில் வசந்த் (ஜீவா) மற்றும் ஆரண்யா (ப்ரியா பவானி) தம்பதிகள் ஒரு வாரம்; ஓய்வெடுக்க முடிவு செய்து செல்கின்றனர். அங்கே செல்லும் வழியிலேயே வசந்த் ஏதோ புரிந்து கொள்ள முடியாத நிகழ்வு நடக்க போகிறது என்பதை உணர்கிறார். அந்த வில்லா வீடுகளில் முதலில் ஆக்ரமிப்பு செய்வது ஜீவா மற்றும் ஆரண்யா ஜோடி என்பதால் ஆள் நடமாட்டமில்லாத வசிக்கும் இடமாக காட்சி தருகிறது. வீட்டினுள் சந்தோஷமாக நேரத்தை கடத்தும் ஜோடிகளுக்கு எதிர் வீட்டில் யாரோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த வீட்டை நோக்கி இருள் சூழ்ந்த இடத்தை கடந்து செல்லும் போது புரிந்து கொள்ள முடியாத நிகழ்வு மீண்டும் நடக்கிறது. இவர்களைப் போல் இருவர் அந்த வீட்டில் இருப்பதையும், அவர்கள் நடவடிக்கையும் இவர்களைப் போல் இருப்பதால் குழப்பத்தில் தங்கள் வீட்டிற்கு ஒடி வந்து விடுகின்றனர். உதவிக்கு யாரும் இல்லாததால், வசந்தும் ஆரண்யாவும் தவிக்கின்றனர். இந்நிலையில் இருட்டான பகுதிக்கு செல்லும் போது தான் காலத்தின் முன் பின் நடக்கும் சம்பவங்கள் நேரத்துடன் சம்பந்தப்படுத்தி மாறுவதை உணர்கின்றனர். அதன் பின் என்ன நடந்தது? அந்த வில்லாவிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா? புரிந்து கொள்ள முடியாத நிகழ்வுகள் எதனால் நடக்கிறது? அது அமானுஷ்யமா அல்லது அதற்கு அறிவியல் மாற்றமா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

இந்த படத்தின் மூலம் வெற்றிகரமாக கம்பேக் கொடுத்திருக்கும் ஜீவா அவருடன் இணைந்து பிரியாபவானி சங்கர் இருவர் மட்டுமே படத்தின் முழுக் கதையும் ஒரு வீட்டின் எல்லைக்குள் ஆரம்பம் முதல் முடிவு வரை சுவாரஸ்யமாக பெரும்பகுதியை தங்களது தேர்ந்த நடிப்பால் கொண்டு செல்கின்றனர். பலமுறை லூப் செய்யும் காட்சிகள் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் காட்சிகளை கருத்தில் கொண்டு முதல் முறை காட்டப்பட்டதை விட அதிகமான விவரிப்புகள் நிறைந்த காட்சிகளாக பின்னர் காட்டப்படும் போது இருவருக்குள்ளும் நடக்கும் சண்டை, சச்சரவு எதனால் என்பதை கேள்வியுடன் பதிலாக புரிந்து கொள்வது சுலபமாகிறது. இவர்களின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

  • ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்
  • Aatti’ speaks about women’s courage and their fight for justice: Isakki Karvannan‘Aatti’ focuses on fearless women who punish injustice“Whether Vijay follows that dialogue or not, I follow it
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!மதுரையின் மண்ணில் பிறந்து வளர்ந்த ஈசா, விளையாட்டு உலகில் சாதனைகள் படைத்த இளைஞராக
  • From Madurai to the Silver Screen — Eesha, the New Hero Introduced Through Habeebi!
  • *‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme