Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • சாலா திரை விமர்சனம்

சாலா திரை விமர்சனம்

admin August 23, 2024
சாலா திரை விமர்சனம்

சாலா திரை விமர்சனம்

சாலா திரைப்படம் (பார்வதி பார்) மதுக்கடை குத்தகையில் ஆரம்பிக்கும் இரண்டு பேரின் பகை என்பதை திரைக்கதையாக அமைத்து இயக்கியுள்ளார் எஸ்.டி.மணிபால். தமியகத்தில் மதுப்பழக்கத்தால் சாமானியர்கள் சந்திக்கும் சமகால சமூகப் பிரச்சினையை சிறப்பாக கையாண்டு சிறந்த நடிப்பினாலும் திரைக்கதையிலும் அழுத்தமான பதிவுடன்,காதல் ,நட்ப்பு, சமூக அக்கறையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இறுதி கட்சியினை பரபரப்பாக கொடுத்திருக்கும் படம் சாலா.

வட சென்னையிலுள்ள ராயபுரத்தில் மதுக்கடையை நடத்தும் குணா (அருள்தாஸ்) மற்றும் சத்யா இருவருக்குள்ளும் பகை இருக்கிறது. இதில் பார்வதி பார் என்ற மதுக்கடையை குத்தகைக்கு எடுத்து நடத்தும் பிரச்சனையில் சத்யா கொல்லப்பட, கோஷ்டி மோதலில் குணாவின் உயிரை காப்பாற்றும் சாலாவை(தீரன்) தத்தெடுத்து வளர்கிறார். பார்வதி பார் மூடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இதனிடையே சத்யாவின் உறவினர் தங்கதுரை (சார்லஸ் வினோத்) குணாவை எப்படியாவது கொல்ல வேண்டும், பார்வதி பாரை நடத்த வேண்டும் என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதே போல் சாலாவும் வளர்ந்து பார்வதி பாரை வழக்கு முடிந்தவுடன் குணாவிற்கு குத்தகைக்கு எடுத்து கொடுத்து நன்றி கடன் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.
இந்நிலையில், அனாதை குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கும் பள்ளி ஆசிரியர் புனிதா (ரேஷ்மா வெங்கடேஷ்).

சமூக ஆர்வலருமான புனிதா பள்ளிகள், கோயில்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட தீவிரமாக எதிர்த்து குரல் கொடுத்து போராடுகிறார். சாலா நடத்தும் மதுக்கடைக்கு முன்பும் புனிதா மதுவுக்கு எதிரான பிரச்சாரம் செய்கிறார். முதலில் கோபப்படும் சாலா பின்னர் புனிதாவின் சமூக அர்ப்பணிப்பை கண்டு வியந்து காதலிக்க தொடங்குகிறார். 23 ஆண்டுகளாக நடந்த வழக்கில் மீண்டும் பார்வதி பார் குத்தகைக்கு விடலாம் என்று தீர்ப்பு வருகிறது. பார்வதி பார் மதுக்கடையை மீண்டும் சாலாவின் உதவியோடு தன் வசப்படுத்துகிறார் குணா. இதனால் கோபமாகும் தங்கதுரை பணம் சம்பாதிக்க ஆபத்தான ரசாயனங்கள் கலந்த சட்டவிரோத மதுபானத்தை விற்கத் தொடங்குகிறார். குணாவையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார். இறுதியில் சாலாவால் குணாவை காப்பாற்ற முடிந்ததா? என்ன நடந்தது? தங்கதுரையின் ரசாயன மதுபானத்தால் ஏற்பட்ட பேராபத்து என்ன? தங்கதுரைக்கு தண்டனை கிடைத்ததா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

சாலாவாக தீரன் உயரத்திற்குகேற்ற உடல்பலத்துடன் அதற்கேற்ற சிகையலங்காரத்துடன் பார் உரிமையாளராக கச்சிதமாக பொருந்தியுள்ளார். பத்து பேரை அடித்தாலும் நம்பும்படியாக அவருடைய உடல்மொழி உள்ளது. முரட்டு தனத்துடன் கூடிய இளகிய மனதும், உதவும் குணமும், ஆக்ரோஷமாக சண்டைக் காட்சிகளிலும், பாசத்திலும் தேர்ந்த நடிகர் போல் சிறப்பாக செய்துள்ளார்.

புனிதாவாக ரேஷ்மா வெங்கடேஷ் மதுக்கடையை எதிர்க்கும் போர்வாளாக வசனங்களை பேசி, போஸ்டர்களை கிழித்து அழுத்தமான பதிவை படத்தில் கொடுத்து இறுதியில் பரிதாபத்தை அள்ளுகிறார்.

வில்லத்தனத்தில் மிரள வைத்து மிரட்டும் தங்கதுரையாக சார்லஸ் வினோத், சாலாவின் நண்பன் தாஸ்சாக நகைச்சுவை பேச்சில் கவனிக்க வைக்கும் ஸ்ரீPநாத், முரட்டுத்தனம் மற்றும் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் குணாவாக அருள்தாஸ் மற்றும் மூன்று பள்ளிக்கூட மாணவர்களின் மது குடிக்க நடக்கும் கலாட்டாவும், அதன் பின்னர் அவர்களுக்கு ஏற்படும் துயரம் படத்திற்கு முக்கிய சாட்சி.

ஒளிப்பதிவு – ரவீந்திரநாத் குரு, இசையமைப்பாளர் – தீசன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் காட்சிகளை கச்சிதமாக தூக்கி நிறுத்துகிறது.

Post navigation

Previous கொட்டுக்காளி திரை விமர்சனம்
Next ‘சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai
  • News

Actor Pugazh Launches Dubai-Themed “Dubai Summer Carnival 2026” in Chennai

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.