Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
டெட்பூல் & வால்வரின் திரைப்பட விமர்சனம்-indiastarsnow.com

டெட்பூல் & வால்வரின் திரைப்பட விமர்சனம்

Posted on July 26, 2024

டெட்பூல் & வால்வரின் திரைப்பட விமர்சனம்
டெட்பூல் & வால்வரின் திரைப்பட விமர்சனம்
டெட்பூல் & வால்வரின் திரைப்பட விமர்சனம்-indiastarsnow.com
டெட்பூல் & வால்வரின் திரைப்பட விமர்சனம்-indiastarsnow.com

படத்தின் ஆரம்ப காட்சிகளே, ஒட்டுமொத்தமாக என்ன மாதிரியான படத்தை பார்க்க போகிறோம் என்பதை நமக்கு உணர்த்திவிடுகிறது. காட்சிக்கு காட்சி ரசிகர்கள் நகைச்சுவையை அனுபவித்து படத்தை கொண்டாட முடிகிறது. ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் ஆகியோர் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து உள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஆங்காங்கே இடம்பெற்றுள்ள கேமியோக்கள் நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

மார்வெல் காமிக்ஸை அடிப்படையாக கொண்ட ஹூஜ் ஜாக்மென் நடிக்கும், வோல்வரின் உலக அளவில் ஒரு லெஜண்டரி கதாபாத்திரமாக கருதப்படுகிறது. இதனிடையே, ரியான் ரெனால்ட்ஸ் நடிக்கும், டெட்பூல் கதாபாத்திரம் தனது எதார்த்தமான வடிவமைப்பால் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகால நீண்ட முயற்சிகளுக்கு பிறகு, அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இணைந்து நடித்துள்ள டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் உருவாகியுள்ளது.

டெட்பூல் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாகவே, டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் வந்துள்ளது. லோகி சீரிஸில் வந்த டைம் வேரியண்ட் அதாரிட்டியை (TVA) சேர்ந்த, பாரடாக்ஸ் எனும் நபர் ஒட்டுமொத்த TVA அமைப்பையும் கைப்பற்ற நினைக்கிறார். அதேநேரம், டெட்பூல் உலகத்தைச் சேர்ந்த வோல்வரின் கதாபாத்திரம் (Anchor Being) இறந்ததால், அந்த ஒட்டுமொத்த உலகமும் அழிய இருக்கிறது. இதனை அறிந்த பாரடாக்ஸ், டெட்பூலின் தேவையை கருதி அவரை காப்பாற்றி, வேறு உலகிற்கு அனுப்ப முயல்கிறார். அப்போது, தனது உலகம் அழியவிருப்பதை அறிந்த டெட்பூல், எப்படி பாரடாக்ஸிடம் இருந்து தப்பிச் சென்று தனது உலகை காப்பாற்றினார் என்பது தான் மீதிக்கதை.

டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் உரிய நகைச்சுவைகள், சண்டைக்காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி உள்ளன. மறுபுறம் அவருக்கு சற்றும் சளைக்காமல், வோல்வரின் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளன. டெட்பூல் உடனான நகைச்சுவை கலந்துரையாடல்களும் எதிர்பார்த்த வெற்றியை தந்துள்ளன. படம் முழுவதும் இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பயணிக்க, ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹுஜ் ஜாக்மேன் ஆகிய இருவரும் மொத்த படத்தையும் தோள்களில் சுமந்துள்ளனர். படம் முடியும் போது, ”வாவ்” என்ற எண்ணம் நிச்சயம் உங்களுக்கு தோன்றும். படத்தின் ஒரு வசனத்தை தவறவிட்டாலும், நீங்கள் ஒரு நல்ல நகைச்சுவையை தவறவிட்டிருப்பீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

  • ஏற்கனவே வால்வு மாற்றப்பட்ட முதியவருக்கு சிறப்பு ‘ஹேங்கர்’ வால்வு சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை
  • Kauvery Hospital Treats Complex Aortic Valve Regurgitation Using Specialised HANCHOR Valve Technology
  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்
  • “Before Akka, I didn’t know I could play a female gangster”: Keerthy Suresh on Becoming Bhavani
  • ‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme