Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது!

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது!

Posted on July 7, 2024
காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது!
காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது!

சென்னை, ஜூலை 6, 2024: காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

தூங்கும் பொழுது ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது கேளாமை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதுஇந்த ENT பிரிவின் சிறப்பு அம்சமாகும். நுண் காது அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைச் செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தனிப்பட்ட உள்நோக்குமானி அறைகள், ஆடியோலஜி ஆய்வகம், தலைச்சுற்றல் ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

முனைவர்மோகன் காமேஸ்வரன்காவேரிமருத்துவமனைரேடியல்ரோடின்காதுமூக்குதொண்டைபிரிவுக்குவருகைதந்துருந்தப்பொழுது, ENT நோயாளிகளுக்குமருத்துவமனைவழங்கியமருத்துவசேவைமுனைப்புகள்மற்றும்உள்கட்டமைப்பை உயர்வாகபாராட்டிபேசினார்.திறமையானமற்றும்உயர்தரமருத்துவவல்லுநர்களைவைத்திருப்பதன்மூலம்,காவேரிமருத்துவமனைமற்றமருத்துவமனைகளைவிடதனித்துவம்பெற்றுள்ளது, என்றுகுறிப்பிட்டார்.மேலும், மருத்துவர்கள்மற்றும்கைவசஉலகத்தரஉள்கட்டமைப்பின்கூட்டுறவால்காவேரிமருத்துவமனைபுதுஉயரங்களைஅடையும்என்றுதீர்க்கமாகத்தெரிவித்தார்.

“ENT பிரிவின் சிறந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ஆனந்த் ராஜூ தலைமையில் எங்கள் ENT பிரிவு தொடங்கப்பட்டதை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்”, என்று காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். “மேலும் இந்த பிரிவு, சமீபத்திய மருத்துவ தொழில் நுட்பங்களை கொண்டு உயர்தர ENT சிகிச்சையை வழங்கும் என்றும் திறமையான மருத்துவ நிபுணர்கள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், செவிப்புலன் மீட்புக்கான கோக்லியர் உள்வைப்புகள், தூக்கத்தில் மூச்சு திணறலுக்கான சிகிச்சை, மூச்சுக்குழாய் அடைப்புக்கு அறுவை சிகிச்சை, நுண் காது அறுவை சிகிச்சைகள் மற்றும் பல ENT சிகிச்சை வகைகள் மீது கவனம் செலுத்தும்”, என்று அறிவித்தார்.

டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் அவர்கள் காவேரி மருத்துவமனையின் முழுமையான சிகிச்சை அளிக்கும் முறையில் ENT பிரிவின் தொடக்கம் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தினார்.

டாக்டர் ஆனந்த் ராஜு, காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, ENT பிரிவின்தலைவர்: “எங்கள் ENT துறையின் தொடக்கம்,அனைத்துவயதினருக்கும்ஏற்படும் காது, மூக்கு மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு விரிவான மருத்துவ சேவைகளை அளிப்பதன் மூலம் சரியான நேரத்தில் சிகிச்சை பெற அவர்களுக்கு உதவும். இங்கு வழங்கப்படும் மேம்பட்ட வசதிகள், துல்லியமான நோயறிதலும், ஒவ்வொருவரின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு சரியான சிகிச்சையை வழங்குவதையும் உறுதி செய்யும். எங்களின் அதிநவீன வெர்டிகோ ஆய்வகம் தலைச்சுற்றல் மற்றும் தீராத தலை சுற்றல் போன்ற நாள்பட்ட நிலமைகள் கொண்ட நோயாளிகளுக்கு நிபுணத்துவ சிகிச்சை அளிக்கும். கோக்லியர் உள்வைப்புகள், வால்யூமெட்ரிக் திசு குறைப்பு, பலாடோபரிங்ஜியோபிளாஸ்டி, மாக்ஸில்லோமாண்டிபுலர் முன்னேற்றம் போன்ற தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கான அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள், நுண் காது அறுவை சிகிச்சைகள் மற்றும் பல ENT சிகிச்சை செயல்முறைகளில் எங்களுக்கு பல வருட ஒருங்கிணைந்த அனுபவம் உள்ளது.”

புதிதாக தொடங்கப்பட்ட ENT பிரிவுடன், காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, சிறந்த மருத்துவ சேவையை தொடர்ந்து வழங்குவதில் கடமைப்பட்டுள்ளது.

சென்னைரேடியல்ரோட்டிலுள்ளகாவேரிமருத்துவமனை, ஒருமுன்னணிமருத்துவமனையாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பைகுடல், பெண்கள்மற்றும்குழந்தைநலம், எலும்பியல், மூட்டுபுனரமைப்பு, சிறுநீரகவியல்முதலியசிறப்புப்பிரிவுகளில், மேம்பட்டமருத்துவமும், அறுவைசிகிச்சைவசதியும்வழங்குகின்றது. பிரத்தியேகநிபுணர்கள்குழு, 50+ கிரிட்டிக்கல்கேர்படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன்தியேட்டர்கள், மேம்பட்டகேத்லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல்
நுண்ணோக்கி, உறுப்புமாற்றுசிகிச்சைவசதிகள், 24/7 டயாலிசிஸ்பிரிவுபோன்றஅதிநவீனவசதிகள்மூலம்உலகத்தரம்வாய்ந்தமருத்துவசேவையை, உலகம்முழுவதும்உள்ளநோயாளிகளுக்குவழங்குகின்றது.

  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme