Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பயமறியா பிரம்மை திரை விமர்சனம்

பயமறியா பிரம்மை திரை விமர்சனம்

Posted on June 24, 2024

பயமறியா பிரம்மை திரை விமர்சனம்
பயமறியா பிரம்மை திரை விமர்சனம்
சிறந்த நாவல் எழுத்தாளர்(சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் ) கபிலன் (வினோத் சாகர்) 25 ஆண்டுகளில் 96 பேரைக் கொலை செய்த சிறைக்கைதி ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையைக் கதையாக ‘பயமறியா பிரம்மை’ என்ற புத்தகத்தை சில வாசகர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் எழுத்தின் தாக்கத்தால் ஒவ்வொரு வாசகர்களும் தங்களை முதன்மை கதாபாத்திரம் போலக் கற்பனை செய்துகொள்கிறார்கள். மற்றொருபுறம் ‘உச்சிமுகடு’ என்ற புத்தகத்துக்காக சாகித்யா அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கபிலன்,
அங்கே தன்னுடைய எழுத்துகளைப் படைப்புகள் எனக் கபிலன் சொல்ல, தன்னுடைய கொலைகளும் படைப்புகள் என ஒவ்வொரு கொலைகளாக விளக்குகிறார் ஜெகதீஷ். அதை ஜெகதீஷின் முகத்தை வைத்து நேராகக் கதை சொல்லாமல், புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களின் முகத்தை வைத்துக் கதை சொன்னால் எப்படியிருக்கும் என்கிற தனித்துவமான முயற்சியே ‘பயமறியா பிரம்மை’ படத்தின் கதை..

ஜெகதீஷாக வரும் ஜேடி-யும், கபிலனாக வரும் வினோத் சாகரும் போட்டிப்போட்டு நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா, ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ,மாறனாக வரும் ஏ.கே., ஜான் விஜய் ஆகியோரின் திரையில் பங்களிப்பு மிக சிறப்பு .

கபிலனின் விருதுபெற்ற ‘உச்சி முகடு’ என்கிற நாவலைச் சந்திப்புக்கு முன் வாசித்து முடித்திருக்கும் ஜெகதீஷ், ‘அது நீட்டி முழக்கப்பட்ட வெற்றுக் காகிதம்’ என்கிறான். தான் கொலைகளைச் செய்த விதமே சிறந்த படைப்பு; தானே சிறந்த கலைஞன் எனக் கூறுகிறான். ‘சக மனிதர்களைக் கொல்வது கலையாக முடியாது’ என கபிலன் மறுக்க, ஜெகதீஷ், கபிலனின் வாதத்தை எதிர்கொண்டு தகர்க்க முயல்கிறான். இருவருக்குமான மோதலில் இருந்து தொடங்கும் படம் மிக சிறப்பு,

  • ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜியின் அடுத்த திரைப்படத்தின் பூஜை !
  • தெய்வ அருள்மனத்தோடு ‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியானது!
  • “‘Cycle Gap’ Is a Beautiful Blend of Nostalgia and Contemporary Romance” – Actress Sherry Agarwal
  • எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்!
  • இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme