Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Election Movie Review-indiastarsnow.com

“எலக்சன்” திரை விமர்சனம்

Posted on May 17, 2024

Election Movie Review-indiastarsnow.com
Election Movie Review-indiastarsnow.com

“எலக்சன்” திரைவிழா

எரீல் குட் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உறியடி விஜயகுமார், பாவல், ஜார்ஜ் மரியான், திலீபன், ப்ரீத்தி அஷ்ராணி உள்ளிட்டோர் நடிப்பில், வெளியாகியுள்ள படம் எலக்‌சன். இன்று மே 17ஆம் தேதி வெளியான படங்களில் கவனம் ஈர்த்த படமாக எலக்‌சன் அமைந்தது

எலக்‌சன் திரை கதை வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சித் தேர்தலால் ஒரு ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்குள் என்ன மாதிரியான பிரச்சினைகள் நடைபெறுகிறது என்பதை திரை கதையாக அமைத்துள்ளார் இயக்குநர் தமிழ், எழுத்தாளர் அழகிய பெரியவன், படத்தின் நாயகன் விஜயகுமார் என மூன்று பேரும் இணைந்து எழுதிய வசனங்கள்தான் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது . எலக்‌சன் திரை கதையில் நான்கு தேர்தல்கள் படத்திற்குள் வருகின்றது. இந்த தேர்தலில் அரசியல் என்றாலே என்னவென்று தெரியாத கதாநாயகன் நடராசனாக (விஜயகுமார்) எப்படி உள்ளே வருகின்றான், அதனால் அவன் எதிர்கொள்ளும் விளைவுகள் என்னென்ன, கதாநாயகனின் அப்பாவே கதாநாயகனுக்காக பிரச்சாரம் செய்யாமல் போனதற்கான காரணம் என்ன? மாமாவின் வற்புறுத்தலால் கதாநாயகன் நடராசனாக (விஜயகுமார்) பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக போட்டியிடுகிறார். அதன் பின் அரசியல், தலைவர்கள், துரோகிகள், சூழ்ச்சியாளர்கள் என பலரால் வன்முறை, போட்டி, பொறாமை ஏற்படுகிறது. கடைசியில் அரசியல் என்னவென்று கதாநாயகன் நடராசனாக (விஜயகுமார்) புரிந்து கொண்டாரா, தேர்தலில் வெற்றி பெற்றாரா என்பதுதான் எலக்சன் படத்தின் கதை.

கிராம புறத்தில் கதை காலம் அமைந்துள்ளதால் உள்ளாட்சி தேர்தலைக் கொண்டே எலக்சன் படம் நகர்வதால் சாதாரண மக்களுக்கும் மிகவும் நெருக்கமான கதையாக உள்ளாட்சித் தேர்தல் நண்பர்கள் பகையாளிகளாக மாறுவதும் , பகையாளிகள் கூட்டாளிகளாக மாறுவதும் இன்றைய அரசியலில் காண்பது மிக இயல்பு இதனை திரை கதையாக அமைத்துள்ளது மிக சிறப்பு .

உள்ளாட்சி தேர்தல் அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கும் பகையுணர்வு, தான் சார்ந்த கட்சியை தூக்கி எறிந்துவிட்டு தனித்து நின்று தனது செல்வாக்கினை நிரூபிக்கும் அரசியல்வாதிகள், சாகும்வரை கட்சிக்கு விஸ்வாசமாக இருப்பேன் என்ற உணர்வோடு இருக்கும் உண்மையான தொண்டன், மக்கள் கொடுத்த பதவி அதிகாரத்தினால் தொடர்ந்து தலைவராகி, அந்த மதமதப்பில் இருக்கும் மோசமான அரசியல்வாதி, கொள்கை அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ளும் சீர்திருத்த அரசியல்வாதி, அரசியல் என்றாலே எதுவென்று தெரியாத நபர்கள், ஓட்டுகளைப் பிரிக்க அரசியல்வாதிகளால் களமிறக்கப்படும் சாமானியர்கள் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்களின் வழியே இயக்குநர் உள்ளாட்சித் தேர்தலை காட்சிப்படுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வகை கதாப்பாத்திரங்களையும் களமிறக்கிய இயக்குநர், அவர்களை இன்னும் சரியாக கையாண்டு இருக்கலாம். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்காகவே இயக்குநருக்கு தனிப் பாராட்டுகள்.

வேலூர் மாவட்டத்திற்குரிய பேச்சு மொழியில் கதாப்பாத்திரங்கள் அனைவரும் உரையாடுவது கதைக் களத்திற்கு கச்சிதமாக பொருந்தியதுடன், படம் பார்ப்பவர்கள் மனதிலும் பதிகின்றது. இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் தமிழ், எழுத்தாளர் அழகிய பெரியவன், படத்தின் நாயகன் விஜயகுமார் என மூன்று பேரும் இணைந்து எழுதிய வசனங்கள்தான். படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் பாவல் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.

திரை கதைக்கு நடிப்பின் மூலம் கதாநாயகன் விஜய குமார், நாயகி ப்ரீத்தி அர்ஷனி நடிப்பு சிறப்பு .ஜார்ஜ் மரியான் கதாபாத்திரம் கட்சியின் உண்மைத் தொண்டனை நினைவுக்கு கொண்டு வருக்குறது . கோவிந்த் வசந்தாவின் இசை திரையில் சிறப்பு . மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மோடில் படம் பார்க்கும் நம்மையும் அழைத்துச் செல்கின்றார்.

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme