Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • “கன்னி” திரை விமர்சனம்

“கன்னி” திரை விமர்சனம்

admin May 17, 2024
"கன்னி" திரை விமர்சனம்-indiastarsnow.com

"கன்னி" திரை விமர்சனம்-indiastarsnow.com

"கன்னி" திரை விமர்சனம்-indiastarsnow.com
“கன்னி” திரை விமர்சனம்-indiastarsnow.com

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி’.

இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதிவு ராஜ்குமார்,
இசை செபாஸ்டியன் சதீஷ்,
படத்தொகுப்பு சாம், பாடல்கள் உமாதேவி, கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு,

மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பாதைய வழியாக கைக்குழந்த உடன் ஒன்று ,பள்ளி செல்லும் வயதுச்சிறுமி ஒன்று என இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கன்னிப் பெண்ணான சேம்பி நடந்து செல்கிறாள்.மாலை இருட்டாகிறது. அங்கே ஒரு பெரியவர் எங்கே செல்கிறாய் என்று கேட்டவர், பெண்ணுக்கு வழித்துணையாக வந்து அந்த ஊரில் கொண்டு வந்து விடுகிறார்.சேம்பி தன் தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள்.அந்த வீட்டில் ஆள் இல்லை எனவே ஒரு கோவிலில் தங்குகிறாள்.விடிந்து மறுநாள் காலையில் அந்த ஊர் மக்கள் விசாரிக்க அருகில் இருப்பவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், அதிர்ச்சி அடைகிறார்கள். நீ தனியாகவா வந்தாய்? என்கிறார்கள் .என்னை ஒரு பெரியவர் கொண்டு வந்து விட்டார் என்கிறாள் .ஆனால் அந்தப் பெரியவர் இறந்து பல்லாண்டுகள் ஆகின்றன என்கிறார்கள்.

கன்னிப் பெண்ணான சேம்பி முன் கதை காட்டப்படுகிறது.அவள் தனது அண்ணன் வேடன், அண்ணி நீலிமா என்று அண்ணன் குடும்பத்தோடு மிகவும் பாசமாக இருக்கிறாள்.அந்த ஊர் மூலிகைக்குப் பெயர் போனது. உயிர் ஆபத்து நோய்களை மூலிகைகளும் மருந்துகளும் அங்கே உண்டு.
அதைப் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த இயற்கை வளங்களை ஆக்கிரமித்து வணிக மயமாக்கி பயன்படுத்திக் கொள்ள ஒரு கும்பல் முயல்கிறது.அதற்கு இடையூறாக இருப்பவர்களைத் துன்புறுத்துகிறார்கள், கொலையும் செய்கிறார்கள், அப்படி சேம்பியின் அண்ணனும் அண்ணியும் கொல்லப்படுகிறார்கள். அந்த மூலிகை ரகசியத்தையும் தன் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள அண்ணனின் இரு குழந்தைகளுடன் தப்பித்து வெளியூர் ஓடுகிறாள் சேம்பி.அப்படித்தான் ஜவ்வாது மலைப் பக்கம் உள்ள தன் தாத்தா ஊருக்குச் செல்கிறாள். அங்கே சென்றாலும் அவளை அந்தக் கும்பல் தேடி வந்து துரத்துகிறது.அவள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள்? அவள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாளா? அந்த மூலிகை மருந்துகளையும் மாந்திரீக ரகசியங்களையும் காப்பாற்றினாளா என்பதுதான் மீதிக் கதை.

Post navigation

Previous The Garfield Movie Review
Next “படிக்காத பக்கங்கள்” திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.