தினசரி மாலை 6:00 மணிக்கு ரயில்
சென்னை:
சென்னை கடற்கரை — வேலுார் கன்டோன்மென்ட் வரை தினசரி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும் என, மக்களின் கோரிக்கை வலுத்தது இதனை தொடர்ந்து இரயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு அந்த முடிவை வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி, பக்தர்கள் வசதிக்காக குறிப்பிட்ட ஒருநாள் மட்டுமே நீட்டிப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கடற்கரை — வேலுார் கன்டோன்மென்ட் மெமு பாசஞ்சர் ரயிலை, திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் இருந்து தினசரி மாலை 6:00 மணிக்கு ரயில், வேலுார் கண்டோன்மென்ட்டை இரவு 9:35 மணிக்கு அடையும். அங்கிருந்து இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12:05 மணிக்கு திருவண்ணாமலையை அடையும்.
திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு புறபட்டு வேலுார் கண்டோன்மென்டை அதிகாலை 5:40 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, காலை 9:50 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். இந்த நீட்டிப்பு சேவை மே 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.