Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அரண்மனை 4 திரை விமர்சனம்

Posted on May 3, 2024

அண்ணன் தங்கை பாசம் மற்றும் ஒரு தாயின் பாசம் போராட்டம் நம்மை திரையில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அரண்மனை 4 திரையில் மிரட்டுகிறது !!

பிரம்மபுத்திரா நதிக்குள் நிலத்திலும் நீரிலும் வாழும் ‘பாக்’ என்ற அமானுஷ்ய தீயசக்தியானது சிறை வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக (தீய சக்தி ) ‘பாக்’ நதியிலிருந்து தப்பித்து மனிதர்களை கொன்று அவர்கள் உருவில் மாரி தனக்கு தேவையானதை சாதித்துக்கொள்கிறது .

அரண்மனையை புதுப்பித்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் சந்தோஷ் பிரதாப். அதே அரண்மனையில் தனது காதல் மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அரண்மனையின் உரிமையாளரான ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அதே இடத்தில் வசிக்கிறார்கள்.வாக்கிங் செல்லும் சந்தோஷ் பிரதாப், தீய சக்தி மூலம் மர்மமான முறையில் இறக்கிறார். மேலும், அவர் உருவத்தில் அரண்மனைக்குள் செல்லும் (தீய சக்தி ) ‘பாக்’ குழந்தைகளை கொலை செய்ய முயற்சி செய்கிறத குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்யும் தமன்னாவும் கொல்லப்படுகிறார் இதனை தொடர்ந்து தமன்னாவின் அன்னான் சுந்தர் சி க்கு தகவல் கொடுக்கப்படுகிறது .

சென்னையில் வக்கீலாக இருக்கும் சரவணனுக்கு (சுந்தர் சி) அவரின் தங்கை செல்வி (தமன்னா) இறந்துவிட்டார் என்கிற தகவல் கிடைக்கிறது. பாழடைந்த அரண்மனையில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த செல்விக்கு என்ன நேர்ந்திருக்கும் அறிந்துகொள்ள உறவினர் கோவை சரளாவுடன் கிராமத்துக்கு வருகிறார் சுந்தர் சி. அரண்மனையின் சொந்தக்காரர் டெல்லி கணேஷ். அவரின் பேத்தி ராஷி கண்ணா நடித்துள்ளார் . அந்த ஊரில் தங்கை, தங்கை கணவர் மரணத்துக்கு யார் காரணம்? அந்த பேய்க்கு கிடைக்கவிருக்கும் சக்திகள் என்ன இதுபோன்ற கேள்விக்கு பதில் தான் இந்த அரண்மனை 4 படத்தின் கதை.-

தமன்னா தனது நடிப்பின் மூலம் படத்தை மெருகேற்றுகிறார் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், குழந்தைகளைப் பிரிந்து தவிக்கும்போதும் தமன்னாவின் நடிப்பு திரையில் தனி சிறப்பு .

ராஷி கண்ணா டாக்டராக நடித்துள்ளார் .கோவை சரளா, VTV கணேஷ், லொள்ளு சபா ஷேசு, யோகிபாபு என அனைவரின் நகைச்சுவை திரையில் சிரித்து ரசிக்க வைத்துள்ளது . கே. ஜி. எப் படத்தின் டெரர் வில்லன் ராம் இந்த அரண்மனையில் சாமியாராக வருகிறார் இவரின் நடிப்பு திரையில் மிரளவைக்கிறார் .

இயக்குனர் சுந்தர். C சண்டை காட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். இரண்டாம் பாதியில் நகைச்சுவை மற்றும் சண்டை காட்சிகளில் மிரட்டியுள்ளார்.

இசை ஹிப்ஹாப் ஆதியின் இசை, பின்னணி இசை படத்தின் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. படத்தின் இறுதியில் வரும் அம்மன் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு படத்தில் பெரும்பாலான காட்சிகள் செட்டில் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை எவ்வளவு தூரம் உண்மையாக காண்பிக்க முடியுமோ கிருஷ்ணசுவாமி அவரது ஒளிப்பதிவில் காட்சி படுத்தியுள்ளார். கிளைமாக்ஸில் வரும் சண்டை மற்றும் கோவில் திருவிழா காட்சிகளை தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ளார் திரை கதைக்கு கூடுதல் பலம் .

அரண்மனை 4

நடிகர்கள் 

சுந்தர் .சி – சரவணன்
தமன்னா – செல்வி
ராஷி கண்ணா – மாயா
சந்தோஷ் பிரதாப் – இஞ்சினியர்
யோகி பாபு – மேஸ்திரி
டெல்லி கணேஷ் –  ஜமீன்
கருடா ராம் – சுவாமி ஜீ
விடிவி கணேஷ் – கார்பெண்ட்டர்

கதை, திரைக்கதை, இயக்கம் – சுந்தர்.சி
தயாரிப்பு – குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd), ஏ.சி.எஸ் அருண்குமார் (Benzz Media Pvt Ltd)
இசை – ஹிப்ஹாப் தமிழா
திரைக்கதை வசனம் – வேங்கட்ராகவன்
ஒளிப்பதிவு – ஈ.கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு – பென்னி ஓலிவெர்
கலை இயக்குனர் – குருராஜ்
சண்டைப்பயிற்சி – ராஜசேகர்
நடனம் – பிருந்தா
பாடல்கள் – கோசேஷா, விக்னேஷ் ஶ்ரீ காந்த், முத்தமிழ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme