Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
குரங்கு பெடல் திரை விமர்சனம்-indiastarsnow.com

குரங்கு பெடல் திரை விமர்சனம்

Posted on May 3, 2024

நடிகர்கள் : காளி வெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், சாய்கணேஷ், ரதிஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், தக்‌ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : சுமீ பாஸ்கரன்
இயக்கம் : கமலக்கண்ணன்
தயாரிப்பு : சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன்

ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வுகளை முடிக்கும் சிறுவனின் கோடை விடுமுறையில் என்ன எல்லாம் நிகழ்கிறது, அதன் விளைவுகள் என்ன என்பதே `குரங்கு பெடல்’.

1980களில் கத்தேரி கிராமத்தில் மக்களின் வாய்க்கை முறையை திரை கதையாக கொடுத்துள்ளார் இயக்குனர் கமலக்கண்ணன் . ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வுகளை முடித்துவிட்டு, கோடை விடுமுறையை முழுக்க கொண்டாட வேண்டும் எனத் திட்டமிடுகிறார்கள் மாரியப்பனும் (சந்தோஷ்) அவனது மூன்று நண்பர்களும். கோடையை குதூகலமாக கழிக்கும் நால்வரும் ஒரு கட்டத்தில்,பெண் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து நாமும் விடுமுறை முடியும் முன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்கிறார்கள். சிரமப்பட்டு காசு சேர்த்து வாடகை சைக்கிளில் முதலில் “குரங்கு பெடல்” பயிற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள் பிறகு பள்ளி ஆசிரியர் உதவியுடன் முமையாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்கிறான் . ஆனால் அதனால் ஒரு பிரச்சனையில் சிக்குகிறான். அந்தப் பிரச்சனை காரணமாக அவனது தந்தை கந்தசாமி (காளி வெங்கட்) கடும் கோபம் கொள்கிறார். மாரி பிரச்சனையில் இருந்து தப்பினானா? அவனது தந்தையின் கோபம் என்ன ஆகிறது போன்ற கேள்விக்கு பதில் தான் இந்த “குரங்கு பெடல்” படத்தின் திரைக்கதை .
கந்தசாமி என்ற கிராமத்து மனிதராக எதார்த்தமாக நடித்திருக்கும் காளி வெங்கட், சைக்கிள் ஓட்ட தெரியாததால் தன்னை நடராஜா சர்வீஸ் என்று ஊர் மக்கள் கிண்டல் செய்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் அதன் வலியை ஒரு ஓரத்தில் வெளிப்படுத்தும் காட்சிகள் அட்ரா சக்கை ரகம். மகனிடம் பேச்சு வாங்கி, அமைதியாக நிற்பவர் வசனம் இன்றி தனது முகபாவனைகள் மூலமாகவே பல உணர்ச்சிகளை வெளிப்படுத்து அசத்துகிறார். எந்த வேடமாக இருந்தாலும் தனது இயல்பான இருப்பு மூலம் அந்த வேடமாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் காளி வெங்கட் இந்த படத்திலும் ரசிகர்கள் மனதில் கந்தசாமியாக சிம்மாசனம் போட்டு உட்கார்கிறார்.

முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சிறுவர்கள் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், மாஸ்டர் ராகவன், மாஸ்டர் ஞானசேகர், மாஸ்டர் சாய் கணேஷ், மாஸ்டர் அதிஷ் ஆகியோர் உடல் மொழி, வசன உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் கிராமத்து மண் மனம் மாறாமல் நடித்திருக்கிறார்கள்.

பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் ஜென்சன் திவாகர் கொங்கு தமிழ் பேசி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். அதிலும், மிலிட்டெரி என்று கெத்தாக இருந்த பிரசன்னாவை பற்றிய உண்மை தெரிந்ததும், அவரை வெத்தாக்கும் ஜென்சனின் பேச்சுக்கள் அத்தனையும் சிரிப்பு சரவெடி.

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme