Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
sabari-review-indiastarsnow.com

சபரி திரை விமர்சனம்

Posted on May 3, 2024

சஞ்சனா (வரலக்ஷ்மி சரத்குமார்) அம்மாவாக உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். பன்முகத்தன்மையின் திரையில் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு விருந்துஅளிக்கிறார் சஞ்சனா.

சஞ்சனா (வரலக்ஷ்மி சரத்குமார்) கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெண் குழந்தையுடன் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வேலை தேடி வரும் வரலட்சுமி சரத்குமார், தனது மகள் தான் உலம் என்று வாழ்கிறார்.

கணவர் அரவிந்த் (கணேஷ் வெங்கட்ராம்), அவளுடைய நண்பன், வழக்கறிஞர் ராகுல் (சஷாங்க் சித்தம்செட்டி), ஏசிபி ரமேஷ் (மதுநந்தன்), சைக்கோ சூர்யா (மைம் கோபி) ஆகியோர் எப்படி இணைக்கப்படுகிறார்கள் என்பதும் குழந்தையை சொந்தம் கொண்டாடும் மைம் கோபி, அதே குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்பது ஏன்?, தனது மகளை மீட்க போராடும் சஞ்சனா (வரலக்ஷ்மி சரத்குமார்) எடுத்த அதிரடி நடவடிக்கையில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ‘சபரி’-யின் திரைகதை.

தாயாக இதயப்பூர்வமான நடிப்பை வரலக்ஷ்மி சரத்குமார் வெளிப்படுத்தியுள்ளார் உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது கதாபாத்திரத்தக்கு நடிப்பின் மூலம் விரக்தி, கோபம் மற்றும் தன் மகள் மீதான அசைக்க முடியாத அன்பை திறமையாக வெளிப்படுத்தினார். கதைக்களம் பலவீனமடையும் போதெல்லாம் படத்தைத் தன் (நடிப்பின் மூலம் )தோளில் சுமந்தாள். அவரது வெளிப்பாடான கண்களும் அழுத்தமான உடல் மொழியும் அவரது பாத்திரத்தில் நடித்தபோது அவர் வெளிப்படுத்திய நம்பிக்கையைப் பற்றி தெளிவாகத் தெரிகிறது.

கணேஷ் வெங்கட்ராம் ஒரு திமிர்பிடித்த கணவனாக சமுதாயத்தில் உயந்த மனிதராக தனது கதாபத்திரத்துக்கு நடிப்பின் மூலம் சிறப்பாக நடித்துள்ளார் , வரலக்ஷ்மி ஆதரவான வழக்கறிஞராக சஷாங்கின் நடிப்பு திரையில் சிறப்பு . மைம் கோபியின் வில்லத்தனம் திரையில் கதைக்கு பலம் சேர்க்கிறது .

இயக்குனர் அனில் காட்ஸால் எழுதப்பட்ட சபரி திரை கதை , தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உணர்ச்சி மிக்க கதையாக இறுதியில் ஒரு தாய் தன் மகளைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு த்ரில்லராக திரை கதையாக அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் கேமரா கதைக்கு ஏற்ப திரையில் நம்மை ரசிக்கவைத்துள்ளது .

கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மிகவும் சிறப்பு .

  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme