Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ரோமியோ திரை விமர்சனம்-indiastarsnow.com

ரோமியோ திரை விமர்சனம்

Posted on April 11, 2024
ரோமியோ திரை விமர்சனம்-indiastarsnow.com
ரோமியோ திரை விமர்சனம்-indiastarsnow.com

நாயகன் விஜய் ஆண்டனி வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தென்காசி வருகிறார். 35 வயதான இவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள்.ஆனால், இவரோ லவ் ஃபீல் வந்தால் தான் திருமணம் செய்வேன் என அடம்பிடிக்கும் விஜய் ஆண்டனிக்கும் அவர் அம்மா அப்பா இருவரும் பெண்தேடி வருகின்றனர் இந்நிலையில் சென்னையில் பெரிய நடிகையாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் மிருணாளினி ரவி, தாத்தா மறைவுக்கு தென்காசிக்கு வருகிறார். நாயகியை பார்த்தவுடன் காதல்
ஏற்படுகிறது விஜய் ஆண்டனி. இவரை திருமணம் செய்ய விஜய் ஆண்டனி ஆசைப்படுகிறார்.

முதலில் திருமணத்தை மறுக்கும் மிருணாளினி ரவி, ஒரு கட்டத்தில் தனது நண்பர்களின் யோசனையின் காரணமாக திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறார். திருமணம் ஆன மறுநாளே விஜய் ஆண்டனியிடம் இருந்து விவாகரத்து கேட்கிறார் மிருணாளினி. இறுதியில் விஜய் ஆண்டனியிடம் இருந்து மிருணாளினி விவாகரத்து கேட்க காரணம் என்ன? விஜய் ஆண்டனி விவாகரத்து கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மனைவியின் எண்ணத்தை புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி, தன்னை மிருளாளினிக்கு பிடித்த மாதிரி மாற்ற என்னவெல்லாம் செய்கிறார் முதல் பாதியில் திருமணம் தொடர்பான காட்சிகளும் சரி, கிளைமேக்ஸ் காட்சியும் சரி சிறப்பாக அமைந்துள்ளது ரொமான்டிக் காமெடி கலந்து ரோமியோ-வாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விநாயகர் வைத்தியநாதன்.

ரோமியோ படத்தில் மாறுபட்ட விஜய் ஆண்டனி நடிப்பை திரையில் காணலாம். அமைதியான கிராமத்து பையனாக, ரோமியோவாக படம் முழுவதும் படம் பார்ப்பவரை ரசிக்கும் படி சிறப்பாக நடித்துள்ளார் ரோமியோ நாயகன் விஜய் ஆண்டனி.

மிருளாளினி ரவியும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. இவர்களை தவிர யோகிபாபு, விடிவி கணேஷ், ஷாரா ஆகியோரின் நடிப்பு திரையில் மிக சிறப்பு .

. பின்னணி இசை பல இடங்களில் நன்றாக ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ஃபருக் ஜே பாட்ஷாவின் கேமரா ஒவ்வொடு காட்சிகளையும் திரையில் ரசிக்கும் படியுள்ளது .

ரோமியோ படத்தில் எந்தவித முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் இந்த விடுமுறை தினத்தில் ரோமியோ படத்தை திரையில் கொண்டாடலாம் .

  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
  • சீன்’ திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது
  • Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan, Master Storyteller Sukumar, Mythri Movie Makers, Sukumar Writings, T Series, #RC17 # RC2Sukku Launched Splendidly With Muhurtham Ceremony
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme