Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • டியர் திரை விமர்சனம்

டியர் திரை விமர்சனம்

admin April 11, 2024
டியர் திரை விமர்சனம்-indiastarsnow.com

டியர் திரை விமர்சனம்-indiastarsnow.com

டியர் திரை விமர்சனம்-indiastarsnow.com
டியர் திரை விமர்சனம்-indiastarsnow.com

ஊட்டியில் வசிக்கும் தம்பதியருக்கு தீபிகா ஒரே மகள், கதையின் நாயகன் அர்ஜுன்(ஜி.வி.பிரகாஷ் ) தனது தாயார் (ரோகினி), அவரது சகோதரர் (காளி வெங்கட்), அவரது அண்ணி மற்றும் அவர்களது குழந்தையுடன் சென்னையில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார் கதையின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். இவர் தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டால் கூட எழுந்து விடுவார். இவருக்கு பெரிய சேனலில் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு முயற்சி செய்து வருகிறார். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சிறு வயது முதல் தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. இதனால் பல திருமண வரன்கள் நின்று போகிறது.நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடும் பழக்கத்தை ஜி.வி.பிரகாஷு இடம் மறைத்து திருமணம் நடைபெறுகிறது.முதல் இரவில் நாயகியின் (குறட்டை)ரகசியம் நாயகனுக்கு தெரியவர இருவரும் இணைந்து வாழ்ந்தார்களா அல்லது ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றாரா? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதே டியர் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் வழக்கமான நடிப்பை கொடுத்து திரையில் ரசிக்க வைத்துள்ளார் . நாயகியாக நடித்து இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் திரையில் தனது நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருப்பது தனி சிறப்பு. கதையின் நாயகி தீபிகா கணவருடன் சேர்ந்து வாய துடிப்பதும் , தன் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்வது என நடிப்பில் ஜொலிக்கிறார் கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் . குடும்பத்துக்கு பெரிய மகனாக தனது நடிப்பினை காளி வெங்கட் திரையில் சிறப்பாக நடித்து திரை கதைக்கு பலம் சேர்த்துள்ளார் . காளி வெங்கட் மனைவியாக வரும் பிளாக் ஷீப் நந்தினி சிறப்பான நடிப்பின் மூலம் ரசிக்க வைத்துள்ளார் . ரோகிணி படத்தின் இரண்டாம் பத்தியில் தனது நடிப்பின் மூலம் இன்றைய இளைய தலைமுறைக்கு குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து தனது நடிப்பின் மூலம் எளிமையாக அனைவருக்கும் புரியும் படி நடித்துள்ளார் ரோகிணி , தலைவாசல் விஜய், இளவரசு, கீதா கைலாசம் ஆகியோர் தனது நடிப்பின் மூலம் திரையில் ரசிக்கவைத்துள்ளார்கள்.

இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் தனது திரை கதிக்கு குறட்டை சத்தத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் படம் ஆரம்பத்திலேயே கதைக்குள் நம்மை கடத்தி சென்று ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் குறிப்பாக கணவன் மனைவி இருவரும் இடையே வரும் பிரச்சனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை நாயகனின் தயார் ரோகிணியின் வாழ்க்கை முறையை கொண்டு சிறப்பாக கதை அமைத்து திரையில் சிந்திக்கவும் வைத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் .

திரைக்கதைக்கு ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.ஒளிப்பதிவு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது. ஊட்டியின் அழகை அழகாக படம் பிடித்து திரையில் கண்ணுக்கு குளுமையான விருந்து படித்துள்ளார் .”,

Post navigation

Previous டபுள் டக்கர் திரை விமர்சனம்
Next ரோமியோ திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.