‘கள்வன்’ திரை விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் “கெம்பன்” என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார் கொங்கு தமிழ் பேசி . திருடுவது, மது அருந்துவது என்று வழக்கமான ஜி.வி.பிரகாஷாக ஆரம்பத்தில் வலம் வந்தாலும், காதல் நிராகரிப்படும் போது கலங்கும் காட்சிகளில் சிறந்த நடிப்பின் உச்சம் , பாராதிராஜாவை வைத்து போடும் திட்டத்தால் வில்லத்தனமான நடிப்பையும் வெளிக்காட்டி மிரட்டுகிறார் ஜி.வி.பிரகாஷ் “கெம்பன்” .
நாயகியாக இவானா, சிரித்த முகத்தோடு ரசிகர்களை கவர்கிறார். இயல்பான நடிப்பு மூலம் கதையோட்டத்துடன் பயணிப்பவர், திருடனின் காதலை ஏற்க மறுத்து, கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தனது காதலனின் சுயரூபம் தெரிந்த பிறகு கோபமடையும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆதரவுஅற்ற முதியவராக பாரதிராஜா தனது நடிப்பினை சிறப்பாக திரையில் ரசிக வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் “கெம்பன்” தாத்தாவாக பாரதிராஜாவை தத்தெடுக்கப்பட்ட பிறகு அதிகாரம் செய்து பேரன்களை அசரடிப்பது மற்றும் புலியை பார்வையால் விரட்டுவது, மலையாளத்தில் பேசி யானையை அடிப்பணிய செய்வது என்று தன் கதாபாத்திரம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவர், தனிமையின் தவிப்பு பற்றி பேசி வருந்தும் காட்சியில், நடிப்பால் திரையில் காண்போரை கலங்க வைத்துவிடுகிறார் பாரதிராஜா.
ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தினா, படம் முழுவதும் குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் தினா.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் புத்துணர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ரேவாவின் பின்னணி இசை கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளராக வனப்பகுதியை சிறப்பாக காட்டியிருக்கிக்கிறார் பி.வி.சங்கர். அதே சமயம், இறுதி கட்சியில் நாயகனை யானை துரத்தும் காட்சியை திரையில் ரசிக்கும் விதம் மகா உள்ளது.
ரேட்டிங் 3/5