Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
இடி மின்னல் காதல்' திரை விமர்சனம் -indiastarsnow.com

‘இடி மின்னல் காதல்’ திரை விமர்சனம்

Posted on March 30, 2024
இடி மின்னல் காதல்' திரை விமர்சனம் -indiastarsnow.com
இடி மின்னல் காதல்’ திரை விமர்சனம் -indiastarsnow.com

அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் நாயகன் சிபி, அதற்கு முன்பாக தனது காதலி பவ்யா ட்ரிகாவுடன் காரில் ஜாலியாக வலம் வர, திடீரென்று குறுக்கே வருபவர் மீது மோதி விடுகிறார். இந்த விபத்தில் அந்த நபர் உயிரிழந்துவிடுகிறார். தெரியாமல் நடந்த விபத்து என்றாலும், தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து சிபி வருத்தப்பட்டாலும், அவர் அமெரிக்கா செல்வதற்கான அனைத்து உதவிகளையும் காதலி பவ்யா ட்ரிகா செய்து வருகிறார் நாயகன் அமெரிக்க சென்றாரா ? ஆதித்யா தனது அப்பாவை கொன்றவரை கண்டுபிடித்தாரா ? போன்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம் இடி மின்னல் காதல்’ .

ஆதித்யா தனது அப்பா இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். அவருக்கு பாலியல் தொழிலாளி யாஷ்மின் பொன்னப்பா ஆதரவளிக்க, இறந்து போனவர் வாங்கிய கடனுக்காக அவருடைய மகன் ஆதித்யாவை தாதா வின்செண்ட் நகுல் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார் சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்க, தன்னால் உயிரிழந்தவரின் மகன் தான் ஆதித்யா என்பது தெரியாமலேயே அவரை காப்பாற்றும் முயற்சியில் நாயகன் சிபி ஈடுபடுகிறார். ஆதித்யா அப்பா இறந்த துக்கத்தை தாங்காமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டும் காட்சிகள் திரையில் சிறப்பாக உள்ளது . அதிலும், தனது அப்பாவின் மரணத்திற்கு சிபி தான் காரணம் என்றதுமே அவர் மீது கொலை வெறிக்கொண்டு அவர் வெளிப்படுத்தும் நடிப்பு திரையில் மிக சிறப்பு .

நாயகனாக நடித்திருக்கும் சிபி, ஆக்‌ஷன் நாயகனுக்கான அனைத்து தகுதிகளும் கொண்டவராக இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, அளவான நடிப்பு மற்றும் அழகோடு ரசிகர்களை கவர்கிறார். வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வின்செண்ட் நகுல், சிறப்பான வில்லன் நடிகராக மிரட்டுகிறார் ,பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின் பொன்னப்பா திரையில் ரசிக்கும் படியாகவும் சிந்திக்கவும் வைத்துள்ளார் .

கிறிஸ்தவ பாதிரியராக நடித்திருக்கும் ராதாரவி மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் இருவரும் திரையில் ரசிக்கும் படியாக உள்ளது நடிப்பு .ஜெகன் இந்த திரை படத்தில் குணச்சித்திர நடிகராக சிறப்பாக நடித்துள்ளார் . ஆதித்யாவின் தந்தையாக நடித்திருக்கும் மனோஜ் முல்லத், மது பழக்கத்தால் சொத்து, குடும்பம் என அனைத்தையும் இழந்து தவிக்கும் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஜெயசந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பு .எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தை வைத்துக்கொண்டு,திரை கதை அமைத்து இருப்பது இயக்குநர் பாலாஜி மாதவன் தனி சிறப்பு .

  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • Passion Studios & KVN Productions present Debut filmmaker Ashok’s Directorial *Director Shankar’s son Arjith Shankar debut movie titled “Lover Boy” launched!
  • பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்
  • T Gopichand, Sankalp Reddy, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen, Presented By Pavan Kumar- Historical Film “Bharthavarsha”
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme