Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஹாட் ஸ்பாட் திரை விமர்சனம்-indiastarsnow.com

ஹாட் ஸ்பாட் திரை விமர்சனம்

Posted on March 30, 2024

ஹாட் ஸ்பாட்  திரை விமர்சனம்-indiastarsnow.com
ஹாட் ஸ்பாட் திரை விமர்சனம்-indiastarsnow.com
கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கேஜே.பாலமணிமார்பன், சுரேஷ் குமார், கோகுல் பினாய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ஹாட்ஸ்பாட்”.

சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் வெளியிட ஹாட் ஸ்பாட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.

இதில் கலையராசன் – ஏழுமலை, சோஃபியா – லக்ஷ்மி, சாண்டி – சித்தார்த், அம்மு அபிராமி – தீப்தி , ஜனனி – அனிதா , சுபாஷ் – வெற்றி, கௌரி ஜி. கிஷன் – தன்யா, ஆதித்யா பாஸ்கர் – விஜய் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் விக்கேஷ் கார்த்திக், கேஜே.பாலமணிமார்பன் பிரபல தயாரிப்பாளரிடம் கதை சொல்ல முதலில் வேண்டா வெறுப்பாக கதை கேட்கும் தயாரிப்பாளர் பின்னர் இயக்குனரின் சுவாரஸ்யமான முதல் கதையை ரசிக்க வேறு கதை இருந்தால் சொல்லச்சொலி கேட்க ஒரு திரைபடம் “ஹாட்ஸ்பாட்” அதில் நான்கு கதை (1)ஹாப்பி மேரிட் லைஃப், (2)கோல்டன் ரூல்ஸ், (3)தக்காளி சட்னி,(4) ஃபேம் கேம் என்ற தலைப்பில் திரை அரங்கில் அனைவரும் ரசிக்கும் படியும் சிந்திக்கும் படியும் ஹாட் ஸ்பாட் திரை கதை அமைத்துள்ளார் .

ஹாப்பி மேரிட் லைஃப்

தன்யா (கௌரி ஜி கிஷன்) மற்றும் விஜய் (ஆதித்யா பாஸ்கர்) இருவரும் காதலர்கள். தங்கள் காதலை பெற்றோர்களுக்கு தெரிவிக்கின்றனர். இதில் பெண் பார்க்கும் படலம் தொடங்கி திருமணம் செய்து கொண்டு பெண் புகுந்த வீட்டிற்கு சென்று வாழும் வரை எப்படிப்பட்ட மனநிலை, சூழ்நிலை இருக்கிறது அதை ஆண்கள் அனுபவித்தால் என்ன நடக்கும் என்பதை விஜய் கனவுகாண்கிறார் , அதன் பின் விஜய்; எடுக்கும் முடிவு என்ன? பெற்றோர்கள் இந்த வித்தியாசமான முடிவுக்கு சம்மதித்தார்களா? என்பதைச் சொல்வதே ஹாப்பி மேரிட் லைஃப் “திருமணம் என்பது பெண்களுக்கு போடும் கட்டுபாபாடுகள் ஆண்களுக்குச் சாதகமாக பயன்படுத்தும் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டி அதை நகைச்சுவையுடன் எதிர்மறையாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கும் கேள்வியை நியாயமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்”.

கோல்டன் ரூல்ஸ்

தீப்தி (அம்மு அபிராமி) மற்றும்; சித்தார்த் (சாண்டி) இருவரின் காதலைச் சுற்றி கதை நகர்கிறது. சித்தார்த் தீப்தியை தன் பெற்றோரை பார்த்து அறிமுகம் செய்து வைக்க அழைத்துச் செல்கிறார். சித்தார்த்தின் பெற்றோர் சம்மதம் தெரிவித்து தீப்தியின் பெற்றோரைப் பற்றி விசாரிக்கின்றனர். தீப்தி தன் பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்று தெரிவித்து பெயரை சொன்னவுடன், சித்தார்த்தின் பெற்றோர் அதிர்ச்சியாகின்றனர். தீப்தியின் அம்மா தனக்கு தங்கை என்றும் சித்தார்த்தின் பெற்றோர் பெரியம்மா, பெரியப்பா முறை வருகிறது என்றும் அதிர்ச்சி கலந்து தெரிவிக்கின்றனார். அண்ணன், தங்கை உறவு முறை வரும் காதலர்கள் இதைக் கேட்டு என்ன முடிவு செய்தார்கள்? என்பதை பார்ப்பவர்களின் யூகத்திற்கே கேள்விக்குறியோடு விட்டுச் செல்வதே கோல்டன் ரூல்ஸ் “ஒடிப்போய் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் உறவு முறைகள் பிற்காலத்தில் எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் விளைவுகளை தெளிவாக புரிய வைத்து சிந்திக்க வைத்துள்ளார். சர்ச்சையான இந்த கதைக்கு தீர்ப்பை கொடுத்தால் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று சாதுர்யமாக கதையை முடித்துள்ளார்”.

தக்காளி சட்னி

காதலர்கள் பத்திரிகையாளர் அனிதா (ஜனனி) மற்றும் ஐ டி துறையில் வேலை செய்யும் வெற்றி (சுபாஷ்). பெண் மோகம் கொண்ட வெற்றியின் எண்ணத்தால் வேலை பறிபோகிறது. வீட்டில் தங்கையின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட எதிர்பாராத நபரின் சந்திப்பு ஆண் பாலியல் தொழிலாளியாக மாறி பணம் சம்பாதிக்க தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக தன் தாயை சந்திக்கும் சூழ்நிலையும், அதே நேரத்தில் ஆண் பாலியல் தொழிலாளி சம்பந்தமாக கட்டுரை எழுதும் நோக்கத்துடன் வரும் அனிதாவை சந்திக்கும் சூழ்நிலையும் அமைந்து விட சமாளிக்க முடியாமல் தடுமாறி போகிறார் வெற்றி. இறுதியில் காதலி அனிதா கொடுக்கும் அதிர்ச்சிகரமான ஷாக் என்ன? காதலுக்கும் காமத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிய வைதாரரா என்பதே தக்காளி சட்னி “ஆண் பாலியல் தொழிலாளியின் எண்ணத்தை தகர்தெறியும் சவுக்கடியாக பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். பெண்கள் தடம் மாறினால் குற்றமாக பார்க்கும் சமூகம் ஆண் தவறு செய்தால் ஏன் அதை கண்டு கொள்வதில்லை என்பதை நியாயமான கேள்வியாக முன் வைத்துள்ளார்.”

ஃபேம் கேம்

ஏழுமலை (கலையரசன்), லட்சுமி (சோபியா) தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளின் திறமையை வெளிக்காட்ட ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க செய்கின்றனர். குழந்தைகளின் திறமையால் படிப்படியாக முன்னேறி இறுதிப் போட்டிக்கு தகுதியாகின்றனர். குழந்தைகளின் வளர்ச்சி இவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. மனைவி லட்சுமியின் அதீத ஆசை,ஈடுபாடு இரு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது. முதல் பெண் குழந்தை எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலையால் இறந்து விடுகிறது. இதனால் அதிர்ச்சியாகும் ஏழுமலை தன் மனைவியின் போக்கையும், குழந்தைகளின் மனஉளைச்சலையும், வயதுக்கு மீறிய நடவடிக்கை குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எப்படி உணர்த்துகிறார் “குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள் வெகுளித்தனம் தான் அவர்களின் குணம், அதை மாற்றாமல் வயதுக்கு மீறிய செயல்களை செய்ய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதையும் ஆழமான கருத்துக்களுடன், காதல், பெண்கள் சமத்துவம், விடுதலை, ஆணாதிக்கம், ரியாலிடி ஷோக்களின் அத்துமீறல்கள், ஆபாச விஷயங்களை குழந்தைகளை விட்டு சொல்ல வேண்டாம் என்று விளாவாரியாக அலசி ஆராய்ந்து சிறப்பான நோக்கத்துடன் திருப்புமுனையுடன் யாரும் அணுகாத கோணங்களில் நிறைவாக கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.”என்பதே ஃபேம் கேம்.

கௌரி ஜி. கிஷன் – தன்யா, ஆதித்யா பாஸ்கர் – விஜய் ஆரம்ப கதையே படத்தை பார்க்க நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. இதில் இவர்களின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

சாண்டி – சித்தார்த், அம்மு அபிராமி – தீப்தி இந்த ஜோடிகள் சந்திக்கும் அதிர்ச்சிகரமான தருணங்கள் காதல்பெற்றோர்களை சிந்திக்க வைக்கிறது.

ஜனனி – அனிதா , சுபாஷ் – வெற்றி இருவரின் காதல் வித்தியாசமான கோணத்தில் பயணித்திருக்கிறது.

கலையரசன் – ஏழுமலை, சோஃபியா – லக்ஷ்மி என்று தங்களுக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளனர். இவர்களின் கதை குழந்தைகளின் மனதில் ஏற்படும் பாதிப்பை பிரதிபலித்தாலும் இன்னும் அழுத்தமாக திரைக்கதை அமைத்திருக்கலாம். சொல்ல வந்த கருத்து சிறப்பு.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் நான்கு கதைகளின் தொகுப்பாக வேறு கோணங்களில் காட்சிப்படுத்திய விதம் திரையில் தனி சிறப்பு.

சதீஷ் ரகுநாதன், வான் இருவரின் இசையில் ஆரம்பம் முதல் கதையில் ஈடுபாட்டுடன் நம்மை ஒன்ற வைக்கிறது .

திரை கதையின் இறுதியில் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் காதலியின் தந்தையான தயாரிப்பாளரை கிடுக்குப்பிடி போட்டு திருமணத்திற்கும், படம் தயாரிக்கவும் ஒட்டு மொத்தமாக சம்மதம் வாங்கும் இயக்குனரின் சாதுர்யத்துடன் முடித்திருப்பதில் “ஹாட்ஸ்பாட்” தனி சிறப்பு பெறுகிறது.

  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • Passion Studios & KVN Productions present Debut filmmaker Ashok’s Directorial *Director Shankar’s son Arjith Shankar debut movie titled “Lover Boy” launched!
  • பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்
  • T Gopichand, Sankalp Reddy, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen, Presented By Pavan Kumar- Historical Film “Bharthavarsha”
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme