நடிகர் டேனியல் பாலாஜி சற்றுமுன் மாரடைப்பால் மரணமடைந்தார்
ஹீரோக்களை தாண்டி வில்லன் ரோல்களில் நடிக்கும் ஒரு சில நடிகர்கள்மட்டுமே சினிமா ரசிகர்களை கவர்வத்துண்டு. அப்படி நெகடிவ் ரோல்களில் எல்லோரையும் கவர்ந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி.
நடிகர் டேனியல் பாலாஜி சற்றுமுன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்கிற செய்தி வந்திருக்கிறது. அது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.
மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இளம் வயதில் அவரது திடீர் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது என்றும், நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்துவிட்டது என்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.