Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
ஆலகாலம் திரைப்படம் உருகுலைக்கும் ஓர் உண்மையின் கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

ஆலகாலம் திரைப்படம் உருகுலைக்கும் ஓர் உண்மையின் கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

Posted on March 21, 2024

ஆலகாலம் திரைப்படம் உருகுலைக்கும்  ஓர் உண்மையின் கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.
ஆலகாலம் திரைப்படம் உருகுலைக்கும் ஓர் உண்மையின் கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

உலகமே கொண்டாடப் போகும் ஓர் உன்னதப்படைப்பாக உருவாகி இருக்கிறது *ஆலகாலம்.

ஆலகாலம்* என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கிறது, இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்.

இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையை சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம்*.

இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா ?
தாயின் லட்சியம்,இளைஞனின் முயற்சி,காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே ஆலகாலம்*திரைப்படம் சொல்லும் கதை
இப்படத்தை ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், உறியடி விஜயகுமார், கார்த்திக் நரேன் போன்ற இயக்குநர்கள் முத்திரை பதித்தவர்கள் .அவர்களைப் போன்று இப்படத்தை இயக்கி உள்ள ஜெயகிருஷ்ணாவும் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தனது ரசனையின் மூலமும் தேடல் அனுபவத்தின் மூலமும் சினிமாவைக் கற்றுக் கொண்டு களத்தில் இறங்கி உள்ளார்.

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ் இப்படத்தில் அம்மாவாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

நாயகனாக,ஜெயகிருஷ்ணா, நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர்மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதலும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக உருவாகியுள்ளது.
தயாரிப்பு. ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்.

ஆக்சன் செண்டிமெண்ட் நிறைந்த இப்படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். #குறிப்பாகத் தணிக்கைத் துறை அதிகாரிகள். கணவன், மனைவி, அம்மா ,குடும்பம் யென்பதையும் தாண்டி நல்ல சமூக நோக்கத்தோடு உருவாகியிருக்கும் ஒரு படமாக இருப்பதாகப் பாராட்டி இருக்கிறார்கள்.

தொழில் நுட்பக்குழுவைப் பொறுத்தவரை,
இயக்கம் -ஜெயகிருஷ்ணா
இசை – என்.ஆர்.ரகுநந்தன்,
ஒளிப்பதிவு -கா. சத்தியராஜ்,
எடிட்டர் -மு. காசிவிஸ்வநாதன்,
கலைஇயக்கம் -தேவேந்திரன்
நடனஇயக்குநர் -பாபா பாஸ்கர், அசார்.
ஸ்டண்ட். -ராம்குமார்,
டிசைன்ஸ் -டிசைன்பாய்ண்ட் என்று தொழில்நுட்பக் கூட்டணி உருவாகி உள்ளது.
தயாரிப்பு. ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்.

நிர்வாகத் தயாரிப்பு. மணி தாமோதரன்,
மக்கள் தொடர்பு -சக்திசரவணன்

ஏப்ரல் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ஆலகாலம் திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • Passion Studios & KVN Productions present Debut filmmaker Ashok’s Directorial *Director Shankar’s son Arjith Shankar debut movie titled “Lover Boy” launched!
  • பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்
  • T Gopichand, Sankalp Reddy, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen, Presented By Pavan Kumar- Historical Film “Bharthavarsha”
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme