Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் அரசியல் ஈடுபட போவதாக கொடுத்த விளக்கத்தை கேளுங்க!!!

சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் அரசியல் ஈடுபட போவதாக கொடுத்த விளக்கத்தை கேளுங்க!!!

Posted on March 4, 2024
சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் அரசியல் ஈடுபட போவதாக கொடுத்த விளக்கத்தை கேளுங்க!!!
சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் அரசியல் ஈடுபட போவதாக கொடுத்த விளக்கத்தை கேளுங்க!!!


வணக்கம்!
புரட்சித் தமிழன் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்
எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என்று சில பத்திரிக்கை நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். அதற்குப் பிறகு எல்லோரும் என்னைக் கேட்கும் கேள்விகள் “நீங்கள் எம்.பி ஆவதற்காக அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ்யசபா எம்.பி ஆகனும்கற ஆசை இருக்கா? மந்திர பதவி மேல் ஆர்வம் உள்ளதா? சத்யராஜ் சார் உங்களுக்குப் பிரச்சாரம் செய்வாரா?” இப்படிப் பல கேள்விகள். நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. மக்களுக்காக வேலை செய்வதற்காகத் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன். நான் களப்பணிகள் செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிறது. ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்தேன். அந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில்,
வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் : நான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம் இல்லை. எந்தக் கட்சியுடன் இணையப் போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன். புரட்சித் தமிழன், தோழர் சத்யராஜ் அவர்களின் மகளாகவும், ஒரு தமிழ் மகளாகவும், தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன்.
நன்றி! வணக்கம்!
திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணர்.

புரட்சித் தமிழன் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்
புரட்சித் தமிழன் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்

  • ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
  • சீன்’ திரைப்படம், தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது
  • Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan, Master Storyteller Sukumar, Mythri Movie Makers, Sukumar Writings, T Series, #RC17 # RC2Sukku Launched Splendidly With Muhurtham Ceremony
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme