Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Remove term: வித்தைக்காரன் திரை விமர்சனம்-indiastarsnow.com வித்தைக்காரன் திரை விமர்சனம்-indiastarsnow.com

வித்தைக்காரன் திரை விமர்சனம்

Posted on February 23, 2024

வித்தைக்காரன் திரை விமர்சனம்
வித்தைக்காரன் திரை விமர்சனம்
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தைக்காரன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி இவர் லோகேஷ் கனகராஜ் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் படம் வித்தைக்காரன். தேஜாவு படத்தை தயாரித்திருந்த ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. வித்தைக்காரன் படத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், மதுசூதன் ராவ், ஜான் விஜய், ஜப்பான் குமார், பாவில் நவகீதன், சுப்பிரமணியம் சிவா, ஆசிப் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனரான வெங்கியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு விபிஆர் இசையமைத்துள்ளார்.

மதுசூதனன், ஆனந்த்ராஜ் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் ஏர்போர்ட் மற்றும் துறைமுகம் வழியாக தங்கம், வைரம் போன்றவற்றை கடத்தி வருகின்றனர்,. இவர்களில் ஆனந்தராஜ், தங்கம் கடத்துவதற்கு நாயகன் சதீஷ் உதவி செய்கிறார். ஆனால் அது முடியாமல் போகிறது. இந்நிலையில் விமான நிலையத்தில் ரூபாய் 25 கோடி மதிப்புள்ள வைரத்தை மதுசூதனன் கடத்துவதை சதீஷ் தெரிந்துக் கொள்கிறார். இதை ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து வைரத்தை அபேஸ் பண்ண திட்டம் போடுகிறார் சதீஷ்.இறுதியில் வைரத்தை ஆனந்தராஜ் கும்பலுடன் சேர்ந்து சதீஷ் கொள்ளை அடித்தாரா? கொள்ளை சம்பவத்தில் சதீஷ் ஈடுபட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

சதீஷ் கதையின் நாயகனாக வளர்ந்துள்ளார். வித்தைக்காரன் படத்தில் நிறைய இடங்களில் தனது நடிப்பால் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார் மற்றும் ஆனந்தராஜ் மாற்றம் ஜப்பான் குமாருக்கும் இடையே நடக்கும் காமெடி திரையில் காமெடியில் கலக்கியுள்ளார், . வித்தைக்காரன் படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் இல்லாமல், தேவையில்லாத சண்டை காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக வித்தைக்காரன் எடுக்கப்பட்டுள்ளது படத்திற்கு தனி சிறப்பு .

  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!
  • From The World of ‘Yaathisai’ To The Battlefields of 1944! Filmmaker Dharani Rasendran’s ‘Death Railway’ First Look and Glimpse Unveil A Visually Stunning Period World!
  • யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
  • நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!
  • A DIWALI CELEBRATION FILLED WITH CARE AND COMPASSION
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme