Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பாம்பாட்டம் திரை விமர்சனம் -indiastarsnow.com

பாம்பாட்டம் திரை விமர்சனம்

Posted on February 23, 2024
பாம்பாட்டம் திரை விமர்சனம்
பாம்பாட்டம் திரை விமர்சனம்

நடிகர் ஜீவன் இந்த படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பாம்பாட்டம். வடிவுடையான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, ஆண்ட்ரியா குருநாதன், லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத், சுமன் என பலர் நடித்துள்ளனர். அம்ரிஷ் இசையமைக்க, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை இனியன் மற்றும் சுரேஷ் கையாண்டுள்ளனர். நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த பாம்பாட்டம் படம் தற்போது 23 .02 .2023 அன்று முதல் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்று உள்ளது .

பாம்பாட்டம் திரை விமர்சனம்-indiastarsnow.com
பாம்பாட்டம் திரை விமர்சனம்-indiastarsnow.com

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் நடக்கும் இந்த கதையில் “அனைத்து நடிகர்கள் உடை , உடல் அமைப்பு , வாழ்வியல் என அனைத்தும் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப ரசிக்கும்படி உள்ளது”

பாம்பாட்டம் திரை விமர்சனம்-indiastarsnow.com
பாம்பாட்டம் திரை விமர்சனம்-indiastarsnow.com

ராணி மகாதேவி (மல்லிகா ஷெராவத்) சமஸ்தானத்தை ஆண்டு வருகின்ற . அந்த காலகட்டத்தில் ஒரு ஜோசியர் நீங்கள் ராணி மகாதேவி (மல்லிகா ஷெராவத்) பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறார். இதனால் அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொள்ளுமாறு உத்தரவிடுகிறார் ராணி மகாதேவி. அதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து அவரை கொன்று விடுகிறது, மேலும் அந்த பாம்பால் மகாராணியின் மகளுக்கும் ஆபத்து என்பதால் அந்த ராஜ குடும்பம் சமஸ்தானத்தை விட்டு வெளியேறுகிறது.. அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க பேசப்படுகிறது. இந்நிலையில் இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார், அதன் பின்பு என்ன ஆனது என்பதே பாம்பாட்டம் படத்தின் திரைக்கதை .

ஜீவன் அப்பா மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து திரையில் ரசிக்கவைத்துள்ளார் . குறிப்பாக போலிஸ் அதிகாரியாக ஜீவன் வரும் காட்சிகள் நன்றாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு . தனது நடிப்பின் மூலம் ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரையில் ரசிக்கவைத்துள்ளார் மல்லிகா ஷெராவத் . போலீஸ் அதிகாரியாக வரும் சுமன், ரித்திகா சென், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் ஆகியோரும் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த காலகட்டத்துக்கு நம்மை அயைத்துச்செல்கின்றனர்.

அம்ரிஷ் இசையில் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப சிறப்பாக இருந்தது.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை இனியன் மற்றும் சுரேஷ் திரையில் சிறப்பாக இருந்தது.

  • ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!
  • From The World of ‘Yaathisai’ To The Battlefields of 1944! Filmmaker Dharani Rasendran’s ‘Death Railway’ First Look and Glimpse Unveil A Visually Stunning Period World!
  • யாத்திசை’ படப்புகழ் இயக்குநர் தரணி ராசேந்திரனின் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!
  • நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) – எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ – முதல் பாடல் வெளியீடு!
  • A DIWALI CELEBRATION FILLED WITH CARE AND COMPASSION
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme