ரணம் திரை விமர்சனம்-indiastarsnow.com

சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் கொலை நடைபெறுகிறது கொலையாளி இளம் பெண்கள் சடலத்தை ” பூமியில் புதைத்தும்) அட்டை பெட்டிகளில் எரிந்த நிலையில் உடல் பக்கங்களைபல்வேறு இடங்களில் கண்டு எட்டுகின்றனர் இறந்தவர் யார்? என்று தெரியாமல் திணறும் காவல்துறைக்கு வரைகலை தெரிந்த நாயகன் சிவா (வைபவ்) சிதைந்த நிலையில் கிடைக்கும் உடலை வைத்து, அவர் யார்? என்பதை வரைபடமாக வரைந்தும் கிரைம் ஸ்டோரியாக எழுதியும் காவல் துறைக்கு குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்கிறார் நாயகன் வைபவ்
கொலைக்கான விசாரணை சூடு பிடிக்கிறது. அதை விசாரித்து வந்த ராஜேந்திரன் திடீரென காணாமல் போக அவரது இடத்துக்கு வருகிறார் காவல் ஆய்வாளர் தான்யாஹோப் கொலைக்கான நோக்கத்தையும் கொலையாளியையும் தான்யாஹோப் சிவாவின் உதவியுடன் அந்த வழக்கின் பின்னணியில் இருப்பவர்களை இருவரும் இணைந்து கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் ’ரணம்’ படத்தின் திரைகதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் வைபவ், நடிப்பில் வித்தியாசத்தை வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் தான் ஏற்ற வேடத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். விபத்தில் மனைவியை இழந்து விரக்தியில் வாழும் அவர், குழப்பம் நிறைந்த கொலை வழக்கின் பின்னணியை கண்டுபிடிக்கும் விதம் மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய அப்பாவித்தமான நடிப்பு நேர்த்தி. ஜாலியாக நடித்துவிட்டு போக கூடிய வைபவ், ஆக்ஷன் சாயல் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அழுத்தமாக நடித்து, தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
கதையின் கதாநாயகனாக நடித்திருக்கும் வைபவ் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் திரையில் அனைவரின் கவனத்தையும் பெறுகிறார் தனது கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்,
தையின் இரண்டாம் பாதியில் வரும் மருத்துவச் செவிலியர் “கல்கி அம்மா” (நந்திதா ஸ்வேதா), கணவரை இழந்த 10 வயது பெண்ணுக்கு அம்மாவாக தனது கதாபாத்திரத்திற்கு கல்கி நடிப்பு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. இறந்த மகளின் உடலைப்பார்த்து கல்கி திரையில் கதறி அழும் கட்சி திரை அரங்கில் அணைவரும் கண்கலங்க வைத்துள்ளார் கல்கி அம்மா .
அறிமுக இயக்குநர் ஷெரீஃப் திரைக்கதையில் இருக்கும் விறுவிறுப்பு மற்றும் யூகிக்க முடியாத திருப்பங்களை படத்தின் இறுதிவரை ரசிக்கும் படி விறுவிறுப்பாக கொண்டுசெல்கிறார் இயக்குனர் , நந்திதா ஸ்வேதாவின் கதாபாத்திரத்தின் அறிமுகத்திற்குப் பிறகும், வைபவின் கதாபாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்வது ’ரணம்’ திரைப்படத்திற்கு கூடுதல் பலம்.
சிறப்பான ஒளிப்பதிவு மூலம் கதைக்குல் நம்மை கொண்டுசெல்கிறார் பாலாஜி கே.ராஜா. அரோல் கரோலியின் பின்னணி இசை திரைக்கதைக்கு பக்கபலமாக உள்ளது .
’ரணம்’ இதுவரை யாரும் திரையில் சொல்லாத “இறப்பைவிட” மிகப்பெரிய ரணத்தின் உச்சம்.
