Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
டெவில் திரை திரை விமர்சனம்

டெவில் திரை விமர்சனம்

Posted on February 2, 2024

டெவில் திரை திரை விமர்சனம்
டெவில் திரை திரை விமர்சனம்

ஹேமா (பூர்ணா) கணவரின் மறுபக்கத்தை நேரில் பார்த்த மனவேதனையில் கார் ஓட்டி வரும் போது, எதிரே ராயல் என்ஃபீல்டு பைக்கில் வரும் அனாதையான ரோஷன் (திரிகன்) மீது மோதி விபத்து ஏற்படுகிறது. சாலை விபத்தில் ஏற்படும் அனுதாபத்தில் இருவரும் பந்தத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். “அலெக்ஸ் (விதார்த்) மற்றும் சோபியா (சுபாஸ்ரீ) ” கண்களால் பேசும் இந்த சந்தர்ப்பச் சந்திப்புக்குப் பிறகு “கணவன் பாதி திருடன் பாதி” கள்ளஉறவில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மையக்கரு. அலெக்ஸ், ரோஷன், ஹேமா, சோபியா ஆகிய இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கு உள்ள உறவு என்ன என்று எழும் கேள்விகளுக்கு “டெவில் திரையில் ரசிக்கும் படியாக பதில் உள்ளது” .

ஒட்டுமொத்த படத்தை தாங்கி பிடிப்பவர் பூர்ணா தான். கணவனின் அன்பு கிடைக்காத சோகத்தில் இருக்கும் போது, கணவரின் மறுபக்கத்தை நேரில் பார்த்த பிறகு அதன் பின் சாலை விபத்தில் ஏற்படும் சந்திப்பில் புது விதமான உணர்ச்சியில் சிக்கி தவிக்கும் ஹேமா கதாபாத்திரத்தில் பன்முகத்தன்மையும் ஆழத்தையும் நேர்த்தியுடன் வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார்.

விதார்த் அலெக்ஸ் கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ்ஷாகவும் தனது சிறப்பான நடிப்பை ரசிக்கும் படி திரையில் கொடுத்துள்ளார் .

திரிகன் கதைகளத்தின் மிகைப்படுத்தும் ரோஷன் கதாபாத்திரத்தில் கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் திரையில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் .

சுபாஸ்ரீ தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் சோபியாவாக திரையில் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளார்.

படத்தின் முதல் காட்சியிலேயே ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் தனது அழகிய காட்சி கோணத்தில் அனைவரின் கவனத்தை கதைக்குள் ஈர்த்துவிட்டார். இரவு காட்சிகள் நன்றாக படமாக்கியதுடன் படத்தொகுப்பாளர் இளையராஜாவுடன் சேர்ந்து திரைக்கதை விறுவிறுப்பாக நகர்த்தி பார்வையாளர்களை பயமுறுத்தவும் செய்துள்ளனர்.

மியூசிக் டைரக்டராக புதிய அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் மிஷ்கின் . இசை மற்றும் பின்னணி இசையும் படத்தின் தரத்தை உயர்த்தி உள்ளதா ? பல இடங்களில் தனக்கு பிடித்த வயலின் இசையை சூப்பராக “REPLAY MOD “பயன்படுத்தி உள்ளார். மிஷ்கின் இசை அமைத்தாரா என்ற சந்தேகத்தை அவருடைய புதிய அவதாரம் ஏற்படுத்தியுள்ளது .

த்ரில்லர், டிராமா, ஹாரர் ஜானர்களில் கலவையாக ஒரு பெண்ணின் பார்வையில் ஹேமா கதாபாத்திரம் மூலம் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆதித்யா. சுவாரஸ்யமான கதைக்களம் இருந்தபோதிலும், திரைப்படம் முழுவதும் பார்வையாளர்களை சஸ்பென்ஸில் வைத்திருப்பதில் கவனம் செலுத்திய இயக்குனர் கிளைமாக்ஸ் காட்சியில் தெளிவாக திரைக்கதை அமைத்து இருந்தால் பார்வையாளர்கள் குழப்பத்தில் தள்ளி இருப்பதை தவிர்த்திருக்கலாம்.

நடிகர்களினி சிறப்பான நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பு மொத்தத்தில் “டெவில் திரையில் யோசிக்கும் படியாக ?

  • Kauvery Hospital Strengthens Emergency Cardiac Response at Chennai International Airport with Installation of Automated External Defibrillators (AED)
  • சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உயிர்காக்கும் ஏ.இ.டி கருவிகளை நிறுவி அவசரகால இதய சிகிச்சையை வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனை!*
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”  
  • “வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme