Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
’கூசு. முனிசாமி வீரப்பன்’ இணையத் தொடர் விமர்சனம்

’கூசு. முனிசாமி வீரப்பன்’ இணையத் தொடர் விமர்சனம்

Posted on December 16, 2023

வீரப்பன் (Veerappan) எனும் “கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர்” (18 சனவரி, 1952 ஆம் ஆண்டு தமிழ் வன்னியர் சமுதாயத்தில் பிறந்தார், கருநாடக மாநில எல்லைப்பகுதியான கோபிநத்தம் என்னும் கிராமத்தில் வன்னிய குல சத்திரியாராக பிறந்தார்).

தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை சொல்லும் ஆவணப்படம் வடிவத்தில் உருவாக்கப்பட்ட ZEE5 OTT தளத்தில் வெளியாகும் இணையத் தொடர் ‘கூச முனிசாமி வீரப்பன்’16 வருடங்கள் ஆகியும் மவுசு குறையாத வீரப்பனின் வாழ்க்கை வரலாறு.

தன் உரிமைக்காக வேட்டையாட தொடங்கிய கூசு. முனிசாமி வீரப்பக்கவுண்டர், பிறகு (முக்கிய புள்ளிகளின் பண தேவைக்காக ) பணத்திற்காக சந்தனமரம் மற்றும் யானைகளை வேட்டையாடியும் , அதன் பிறகு அவர் எப்படி கொலை குற்றவாளியாக உருவெடுக்கிறார் என்பதை மிக தெளிவாக சொல்லியிருக்கும் இந்த தொடரின் இறுதியில், வீரப்பன் நல்லவனா?, கெட்டவனா? என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. இந்த கேள்விக்கு அவரைச் சார்ந்தவர்கள், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காவல்துறையினர் சொல்லும் பதிகள் ஒரு பக்கம் இருந்தாலும், வீரப்பன் என்ற சாதாரண மனிதர் இத்தகைய குற்றவாளியாக உருவெடுக்க காரணம் அதிகாரிகள் தான் பொது மக்களுக்கு புரியும் படி தெளிவாக உண்மையினை உரக்க சொல்லியுள்ளார் .

(சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் வெட்டிய மரம் காட்டில் உள்ள மிருகத்திடம் விற்கப்பட்டதா ?

காட்டில் உள்ள யானையின் தந்தம் மரத்திடம் விற்கப்பட்டதா ?

சாதாரண கிராமத்தில் பிறந்தவனை காட்டிற்கு கடத்தியது “அதிகாரம் கொண்ட மனித மிருகங்களா” சுதந்திர இந்தியாவில் தான் நயத்தை கேட்பவன் தேச துரோகியா ? )

வீரப்பன் ஆவணப்பட இணையத் தொடர் 1996 ஆம் ஆண்டு வீரப்பன் நேரடியாக தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதோடு, அந்த நேர்காணல் வீடியோவின் சில பகுதிகளையும், சில சம்பவங்களை நடிகர்கள் மூலம் சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, வீரப்பனை சந்தித்து நேர்காணல் செய்த பத்திரிகையாளர்கள், அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், காவல்துறையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது தொடருக்கு பக்கபலமாக உள்ளது.

வீரப்பன் இன்றும் திரையில் சிங்கம் போல் கஜித்துள்ளார் என்றால் மிகையாகாது 6 பகுதிகளை கொண்ட இந்த இணையத் தொடர், ஆவணப்பட பாணியில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில், ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் தொடரை பார்க்கும் அனுபவத்தை கொடுத்திருப்பது இத்தொடரின் தனி சிறப்பு. அதிலும், தான் செய்த கொலைகள் பற்றியும், அந்த கொலைகளை எதற்காக?, எப்படி? கொலை செய்தேன் என்பதையும் வீரப்பன் பேட்டியில் சொல்லும் பகுதியும், ரஜினிகாந்தின் அரசியல் பற்றியும் பேசியிருப்பது மற்றும் அவருடைய பேச்சு பாணி திரையரங்கையே அதிர வைக்கும் விதத்தில் இருக்கிறது. இந்த காட்சிகளை நடிகர்களை வைத்து படமாக்கி இருந்தால் கூட இத்தகைய வரவேற்பு கிடைத்திருக்காது. வீரப்பன் பேசிய அந்த வீடியோ தொகுப்பை அப்படியே இணைத்திருப்பது தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது “வீரப்பனின் வெள்ளந்தியான பேச்சு இன்றும் சாமானியர்களையம் ரசிக்கவைத்துள்ளது திரையில்” .

தொடரில் , நக்கீரன் ஆசியர் கோபால், சீமான் போன்றவர்கள் வீரப்பனுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி அலெக்ஸாண்டர் எப்படி இருந்தாலும் வீரப்பன் ஒரு கொடூரமான குற்றவாளி என்ற கருத்தை பதிவு செய்கிறார். அதே சமயம், வீரப்பனால் இறந்த காவலரின் மகள், ”என்னதான் இருந்தாலும், யாரையும் கொலை செய்திருக்க கூடாது” என்று சொல்வதும், தன்னுடைய அப்பா செய்த தவறால் பச்சிளம் குழந்தையாக இருக்கும் போதே தனது தகப்பனை இழந்த அந்த பெண்ணிடம் வீரப்பன் மகள் மன்னிப்பு கேட்கும் இடமும் கலங்க வைக்கிறது .

வீரப்பன் கதாபாத்திரத்திலும், அவருடன் இருந்தவர்கள் வேடங்களிலும் சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் முகத்தை கூட சரியாக காட்டாமல் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சரத் ஜோதி அதனுடன் வீரப்பனின் நேர்காணல் காட்சிகளை இணைத்து 6 தொடர்களையும் மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

ஜெயசந்திர ஹஷ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்தும், ஜெயசந்திர ஹஷ்மி, பிரபாவதி.ஆர்.வி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கமும் 6 பகுதிகளையும் வீரப்பனின் வீடியோ வரும்போது(ரசிக்கின்ற்னர்) பொதுமக்கள் உற்றுக்கவனிக்கின்றனர் அதைபோல் ஒரு பேட்டி முடிந்தவுடன் அந்த நபரின் கொடுமைகள் காட்டிச்யாக பார்ப்பது விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறது.

சதிஷ் ரகுநாதனின் பின்னணி இசை, ராஜ்குமார் .பி.என்-னின் ஒளிப்பதிவு, ராம் பாண்டியனின் படத்தொகுப்பு தொடருக்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக படத்தொகுப்பாளர் ராம் பாண்டியன் காட்சிகளை தொகுத்த விதம் தொடருக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
  • Shooting of “Attacker” BeginsProduced by Dinesh Raj under the banner of Zinema Entertainment
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme