Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • பிரைம் வீடியோ வழங்கும் “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா

பிரைம் வீடியோ வழங்கும் “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா

admin November 18, 2023
பிரைம் வீடியோ வழங்கும் “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா

பிரைம் வீடியோ வழங்கும் “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா

பிரைம் வீடியோ வழங்கும், ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில், ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள “தி வில்லேஜ்” தமிழ் ஒரிஜினல் சீரிஸ் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் சீரிஸாக, உருவாகியுள்ள “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

பிரைம் வீடியோ இந்தியா & தென்கிழக்கு ஆசியா, தலைவர் அபர்ணா புரோஹித் பேசியதாவது..
பிரைம் வீடியோ மூலம் தி வில்லேஜ் சீரிஸை உங்கள் முன் அறிமுகப்படுத்துவது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸ் மூலம் எங்கள் பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல உள்ளோம். இந்த சீரிஸ் ஒரு மறக்க முடியாத பயணம். மிக உணர்வுப்பூர்வமான பயணம். 4 வருடங்கள் முன் ஆரம்பித்தது. முழுதாக எழுதி முடிக்க 2 வருடங்கள் ஆனது. கோவிடை கடந்து இது முழுதாக உருவாக ஆரம்பித்த தருணத்தில், ஆர்யா சார் ஓகே சொன்ன பிறகு இந்த சீரிஸ் உண்மையிலேயே மிகப்பெரியதாகிவிட்டது. பொதுவாக ஹாரர் சீரிஸ் இங்கு யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில் இது உங்களுக்கு கண்டிப்பாக மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படக்குழு அனைவரும் கடினமாக உழைத்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் B.S. ராதாகிருஷ்ணன் பேசியதாவது…
மிக்க மகிழ்ச்சி, நான்கு வருடங்கள் முன்பு மிலிந்த் சார் இதைப்பண்ணலாம் என்றார். அப்போது ஆரம்பித்த பயணம் அபர்ணா மேடம் சொன்னது போல், இந்தக்கதை எழுதவே 2 வருடம் ஆனது. வேறு வேறு இடத்தில் நடக்கும் பல கதைகள், அதை ஒன்றிணைக்கும் மையப்புள்ளி எது, எப்படி என்பது தான் சுவாரஸ்யம். ஆர்யா சார் வந்த பிறகு தான் இது பெரிய படைப்பாக மாறியது. இந்த படைப்பை பொறுத்தவரை, மிலிந்த் மற்றும் எங்களின் பார்வையும், கதையின் மீதான நம்பிக்கையும் தான் இதில் நடிக்க காரணம் என்றார் ஆர்யா, அவருக்கு நன்றி. அமேசான் யூஎஸ் போலவே இங்கேயும், அவர்கள் முழுமையான ஈடுபாட்டோடு, உழைத்தார்கள். பெரும் ஆதரவு தந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியதாவது…
இது தமிழுக்கு மிகவும் புதிது. கிராஃபிக் நாவலை இங்கு யாரும் திரைப்படைப்பாக செய்ததில்லை. ஆர்யா சாருக்கும் மிகப்புதியது. இதை அவர் செய்ய ஒத்துக்கொண்டது பெரிய விசயம். கிராஃபிக் நாவலை தமிழ்நாட்டில், தூத்துக்குடி அருகில் நடக்கும் கதை போல நமக்கு நெருக்கமாக, நம் மொழியில் உருவாக்கியுள்ளோம். முழுக்க நைட் கால் ஷீட் தான் அதனால் எல்லோரும் ரொம்ப கஷ்டபட்டு உழைத்தனர். நடிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. இசை இந்த சீரிஸிற்கு மிக முக்கியம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அட்டாகாசமான இசையை தந்துள்ளார். விஷுவலும் நன்றாக வந்துள்ளது ஒளிப்பதிவாளருக்கு நன்றி. தொழில் நுட்பக்குழு மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஆர்யா பேசியதாவது…
அபர்ணா மேடம் இல்லாமல் அமேசான் ப்ரைமில் எந்த புராஜக்டும் ஓகே ஆகாது. அவர் இதை ஓகே செய்திருக்கிறார் அதுவே பெரிய விசயம். இங்கு நிறைய ஒரிஜினல்ஸ் வர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா ? என்று தான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷிவல், படத்தை விட பெரிய பட்ஜெட், இதை எல்லாம் இங்கு எடுக்க முடியுமா?, சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை ப்ரைமில் ஒகே செய்தார்கள், மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார் அதுவே மகிழ்ச்சி. மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார், இதை எடுப்பது மிகக்கடினம். ப்ராஸ்தடிக் மேக்கப், ஷீட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது. 3 வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டபட்டிருக்கிறோம். மேலும் இது எனக்கு புது எக்ஸ்பீரியன்சாக இருந்தது. இவ்வளவு கோரியான ஹாரர் கதை நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட், அதை நம்பித்தான் நான் வேலை செய்தேன். நரேன் சார் அவருடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஆனால் நிறைய சப் பிளாட் இருக்கும். ஒவ்வொரு எபிஸோடும் நீங்கள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம், அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார். விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து, உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நடிகை பூஜா ராமசந்திரன் பேசியதாவது..
தமிழில் நீண்ட காலம் கழித்து, நான் திரும்ப வந்திருக்கிறேன், மகிழ்ச்சியாக உள்ளது. என்னை எப்படி மிலிந்த் இந்த பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது, இம்மாதிரி பாத்திரம் செய்ய வேண்டும் என்பது கனவு, எனக்கு இந்த பாத்திரம் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் கர்பமாகும் முன் வாய்ப்பு வந்தது. நிறைய ஆக்சன் காட்சிகளில் நடித்தேன் மூன்று மாதத்தில் எடுத்து விடுங்கள் என்று டைரக்டரிடம் கேட்டேன், அவர் செய்து தந்தது மகிழ்ச்சி. பொதுவாக நைட் ஷூட் எடுப்பது கஷ்டம் இது அதை விட கஷ்டம் ஆனால் மிலிந்த் சார் செம்ம கூலாக ஹேண்டில் செய்தார். இந்த சீரிஸில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. எல்லோரும் கஷ்டப்பட்டுள்ளார்கள் சீரிஸ் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது..
இந்த சீரிஸில் ரொம்ப ஈஸியாக இருந்து நடித்தது நான் மட்டும் தான். ஏனென்றால் எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போடுவது நான் தான், அதை செய்வது அர்ஜூன். இயக்குநரின் உழைப்பு மிகப்பெரியது. எல்லாவற்றையும் அருமையாக ஒருங்கிணைத்துள்ளார். அமேசான் எங்கள் எல்லோரையும் மிக நன்றாக பார்த்துக் கொண்டார்கள், நான் எல்லாம் ஏசி ரூமில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஷீட் செய்தேன், மற்றவர்கள் காட்டுக்குள் பயங்கர கஷ்டபட்டிருக்கிறார்கள் அதைக்கேட்கும் போது தான் தெரிகிறது. இது தமிழுக்கு மிகப்பெரிய புதுமையான சீரிஸ், உங்களுக்குப் பிடிக்கும்.

நடிகர் அர்ஜூன் சிதம்பரம் பேசியதாவது..
என்னை, நேர்கொண்ட பார்வை, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் வேறு ரூபத்தில் பார்த்திருப்பீர்கள், இதில் புதுவிதமாக பார்ப்பீர்கள். இது மிகப் புது அனுபவமாக இருந்தது. ஆர்யா கூட ஒரு சீனில் நடித்துள்ளேன் அதிலும் அவர் பின்னிவிட்டார். அது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், எனக்கு படத்தில் எந்த வித சிரமமும் இல்லை நடக்க கூட தேவையில்லை, வீல் சேரில் இருப்பேன். என்னுடைய கதாபாத்திரம் அப்படி தான் அமைந்தது , நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்தாலும் நடிக்காவிட்டாலும் இயக்குநர் தான் பொறுப்பு, அனைத்தும் அவரைத் தான் போய் சேரும், இந்தத் தொடர் வெளியாவதற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன் நன்றி.

நடிகர் ஜான் கொக்கன் பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம், என் குரு அஜித்குமாருக்கு வணக்கம், இந்த சீரிஸ் எனக்கு புதுமையான அனுபவம். சர்பாட்டா பரமபரை படத்திற்கு பிறகு ஆர்யா கூட மீண்டும் இதில் நடித்துள்ளேன், இதிலும் சண்டை போட்டிருக்கிறோம். என் பொண்டாட்டி கூட சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. இக்கதையில் மியூடண்டாக நடித்தவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் காஸ்ட்யூமே 20 கிலோவுக்கு மேல் இருக்கும், அதில் ப்ராஸ்தடிக் மேக்கப் வேறு போட்டு நடித்தார்கள். சண்டைக்காட்சிகள் பயங்கரமாக உழைத்து எடுத்துள்ளார்கள். நீங்கள் இதுவரை பார்க்காத புதிய அனுபவமாக இந்த சீரிஸ் இருக்கும் நன்றி.

நடிகர் ஆடுகளம் நரேன் பேசியதாவது…
சீரிஸ் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள், நிறைய கஷ்டப்பட்டோம் ஆனால் இப்போது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நடித்ததில் இது மிகப்புதுசு. இந்தியாவிற்கே இது புதுசாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் நாங்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் நம்புகிறோம் அனைவருக்கும் நன்றி.

கைதி புகழ் நடிகர் ஜார்ஜ் மரியான் பேசியதாவது
எல்லோருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி, இந்த சீரிஸில் கிராமத்தில் இருக்கும் ஒருவராக நடித்துள்ளேன். மிக நல்ல அனுபவம் உடன் நடித்தவர்கள் அனைவருக்கும் நன்றி எல்லோருக்கும் நன்றி.

நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது,
நான் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அதிக நேரம் படப்பிடிப்பு நடந்தது, அப்போதே இயக்குநர் குறித்து தெரிந்துவிட்டது. நான் சீனில் நன்றாக பேசி நடித்த பிறகு, மீண்டும் சாதாரணமாக ஒன் மோர் என்று கேட்பார். நான் எனக்கு மட்டும் தான் இப்படி செய்கிறார் என்று தான் நினைத்தேன், ஆனால் அனைத்து நடிகர்களுக்கும் இதே நிலைமைதான், அனைவருமே பல வருடம் அனுபவம் நிறைந்தவர்கள் ஆனால் அனைவரிடமும் இயக்குநர் ஒன் மோர் கேட்பார். திரையில் தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்தார், அதை யாரையும் கோபப்படுத்தாமல், மகிழ்ச்சியாக முகத்தை கொண்டு, எங்களிடம் வேலை வாங்கிவிடுவார். மிகத்திறமையான இயக்குநர். இந்த சீரிஸ் புதுசாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் ஒரு ஆச்சர்யத்தை கொடுக்கும். கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

நடிகர் அஸ்வின் குமார் பேசியதாவது
எனக்கு இந்தக்கதாப்பாத்திரம் தந்ததற்கு அமேசான் மற்றும் இயக்குநருக்கு நன்றி. ஆர்யா சாருக்கு மிக்க நன்றி. மிகப்புதுமையான அனுபவம். எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். எல்லோரும் தாங்கள் கஷ்டப்பட்டதை சொன்னார்கள், கஷ்டம் கண்டிப்பாக இருக்கும் ஆனால் இப்போது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. செம்ம ஆக்சன் காட்சிகள் நடித்துள்ளோம், வலி எல்லாம் பொருட்டே இல்லை, ஒரு பேஷன் இருந்தால் தான் இதைச் செய்ய முடியும். எல்லோரும் இதில் ஹீரோ தான். எல்லோருக்கும் நன்றி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை கலைராணி பேசியதாவது
என்னோட முதல் வெப் சீரிஸ் அமேசானுக்கும் டைரக்டருக்கும் நன்றி. எல்லோரும் தாங்கள் கஷ்டப்பட்டதை சொன்னார்கள், நான் எல்லோரையும் விட ஃபர்ஸ்ட்டாக போக வேண்டும், லாஸ்ட்டாக வர வேண்டும், மேக்கப் போடவே 2 மணி நேரம் ஆகி விடும். மேக்கப் ஆர்டிஸ்ட் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள், எப்போதும் அருகிலேயே இருப்பார்கள். மிக்கடினமாக உழைத்துள்ளார்கள். இயக்குநர் என்னை நேரில் வந்து பார்த்து, முழுக்கதையும் சொன்னார் அப்போது அவர் இயக்கத்தில் நயன்தாரா படம் வந்திருந்தது, எனக்கு பிடித்த படம், உடனே ஆர்வத்தில் அவரை சந்திந்தேன். எனக்கு கதை பிடித்திருந்தது, நான் எப்படி பேச வேண்டும் என்பதில் ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லித்தாந்தார்கள். நான் இதுவரை நடிக்காத பாத்திரம், இப்படி ஒரு சீரிஸ் பார்த்திருக்க மாட்டீர்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் கோகுல் பேசியதாவது..
எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு வந்ததற்கு ஆர்யா சார் தான் காரணம் அவருக்கு நன்றி. சந்தோசம். டைரக்டரிடம் பாத்ரூம் கேட்டால், ரெண்டு மணி நேரம் கழித்து போகலாம் என்பார், மேக்கப் போட்டால் கடைசி வரை கலைக்க முடியாது, ரொம்பவும் கஷ்டபட்டு எடுத்துள்ளோம். ஆனால் சீரிஸ் பார்க்க புதிதாக இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

குழந்தை நட்சத்திரம் ஆழியா பேசியதாவது
ஆர்யா சார் பொண்ணா நடிச்சிருக்கேன் வில்லேஜ் சீரிஸ், செம்ம அட்வென்ச்சாராக இருக்கும். ஷீட்டிங்கில் தூங்கும்போது ஜோக் சொல்லி எழுப்பி விட்டு விடுவார்கள். ஜாலியாக இருந்தேன் இந்த சீரிஸ் செம்மையாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஆர்யா சார் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். எல்லோருக்கும் நன்றி.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திகில், ஒரிஜினல் வெப்சீரிஸ் தி வில்லேஜ் சீரிஸுக்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மதுரை சொல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள தி வில்லேஜ் தமிழ் ஒரிஜினல் சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார், தி வில்லேஜ் சீரிஸ், அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச் சொல்வது தான் தி வில்லேஜ் சீரிஸ். ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதையை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தத் சீரிஸில், பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தி வில்லேஜ் சீரிஸ் பிரைம் வீடியோவில் நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுடன், ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாக உள்ளது.

Post navigation

Previous தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்….
Next Award-winning directors Anurag Kashyap and Gautham Vasudev Menon lend their voices to ‘Creative Killers,’ premiering on November 10th, 2023, on Animal Planet,

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 
  • News

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 

April 17, 2026
India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 
  • News

India’s First-Ever Pan India Reality Show ‘Big Pitchure’ Launched — 

April 17, 2026
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*
  • News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*

April 16, 2026
Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 
  • News

Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 

April 16, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.