தென்னிந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் தனது 44வது பிறந்தநாளை ரசிகர்கள் பிரமாண்ட மேடையில் 230 அடி உயர கட்அவுட்டை உருவாக்கி கொண்டாடினார்கள்
தென்னிந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் தனது 44வது பிறந்தநாளை ரசிகர்கள் பிரமாண்ட மேடையில் 230 அடி உயர கட்அவுட்டை உருவாக்கி கொண்டாடினார்கள்.இதில் பாகுபலி நாயகன் பிரபாஸின் ரசிகர்கள் அவரை “டார்லிங் ஸ்டார்” என்று செல்லப் பெயர்வைத்து அழைத்தது குறிப்பிடத்தக்கது ,ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் பிரபாஸின் சலார் படத்திலிருந்து ரசிகர்கள் பிரமாண்ட மேடையில் 230 அடி உயர கட்அவுட்டை உருவாக்கினர், (23 -10 -2023) 12 மணி நள்ளிரவில் “டார்லிங்” ரசிகர்கள் “ஒளி” “ஒளி” அமைத்தும் பட்டாசுகளை கொளுத்தியும்,வான வெடிகளை வெடித்தும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தும் மிகப்பெரிய கிரேன் மூலம் 230 அடி உயர கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும் “டார்லிங் ஸ்டார்” ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள்.


சென்னையில் 1979 இல் பிறந்தார் “டார்லிங் ஸ்டார்” இயற்பெயர் வெங்கட சத்தியநாராயணா பிரபாஸ் ராஜு உப்பளபதி ஆகும் இவர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் “பாகுபலி” முத்தொகுப்பில் நடித்ததற்காக பிரபாஸ் திரை உலகில் முக்கியத்துவம் பெற்றார். அதுமட்டுமின்றி, அவர் “மிர்ச்சி”, “சாஹோ”, “ராதே ஷியாம்” மற்றும் “ஆதிபுருஷ்” போன்ற படங்களில் சிறப்பாக நடித்துள்ளார் என்பது தனிச்சிறப்பு .
“டார்லிங் ஸ்டார்” பிரபாஸின் அடுத்த படம் சாலார் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும், இதில் அவர் ஸ்ருதிஹாசன் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் இணைந்து நடிக்கிறார். சாலார் பகுதி 1: தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் செப்டம்பர் 28 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது . கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் சாலார் பகுதி 1 இயக்கியுள்ளார்.
“டார்லிங் ஸ்டார்” பிரபாஸ் நடித்த மற்றொரு முக்கியமான திரைப்படம் கல்கி 2898 AD அறிவியல் புனைகதை ஆகும், இதில் தீபிகா படுகோன், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர். கல்கி 2898 AD திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஜப்பானிய, சீனம் மற்றும் கொரியன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் விநியோகிக்கப்படும், மேலும் பூஷன் குமாரின் டி-சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் கல்கி 2898 AD.