Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
திரையின் மறுபக்கம் திரை விமர்சனம்-indiastarsnow.com

திரையின் மறுபக்கம் திரை விமர்சனம்

Posted on October 19, 2023

திரைப்படத்தின் தொடக்கத்தில் ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார் அவர் (தீவிர சினிமா ரசிகரான விவசாயி சத்யமூர்த்தி) அவர் வாய்க்கையில் நடந்த சோகம்தான் திரையின் மறுபக்கம்’ திரைபடம். சினிமா மீது மோகம் கொண்ட அனைவரும் பார்க்க வேண்டிய படமாகவும் பட்ஜெட்டில் சிறிய படமாக இருந்தாலும் திரைகதையில் சொல்லப்பட்டிருக்கும் விசயம் மிகபெரியதா உள்ளது.

கள்ளக்குறிச்சியில் விவசாயி சத்யமூர்த்தி தனது சொந்த வேளையாக சென்னை வருகிறார் அப்போது டீ கடியில் உதவி இயக்குனர்கள் ரஜினியிடம் கதை சொல்லப்போவதாக அவர்களுக்குள் பேசிக்கொள்கின்றனர் அப்போது தீவிர சினிமா ரசிகரான விவசாயி சத்யமூர்த்தி, ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட, அவரது ஆசையை பயன்படுத்தி வேலை தெரியாத உதவி இயக்குநர் செந்தில், அவரை தயாரிப்பாளராக்கி திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். படம் முடிந்து வியாபார பணியை தொடங்கும் போது, படம் சரியில்லாததால் விலை போகாது என்று சொல்வதோடு, படத்தில் மேலும் காதல் கட்சி ,குத்து பாடல்கள் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே, நிலத்தை விற்றுவிட்டு, சொந்த வீட்டை அடமானம் வைத்து படம் தயாரித்திருக்கும் சத்யமூர்த்தியால் தொடர்ந்து பணம் செலவு செய்ய முடியாமல் திணறுகிறார். இருந்தாலும், படத்தில் கூடுதலாக சில காட்சிகளை சேர்த்தால் மட்டுமே படம் வியாபாரமாகும் என்ற இக்கட்டான நிலை ஏற்படுகிறது.

இதற்கிடையே, கடன் கொடுத்த பைனான்சியர் மிரட்ட, எப்படியாவது படத்தை வெளியிட வேண்டும் என்று போராடும் சத்யமூர்த்தி மீண்டும் பல லட்சங்கள் கடன் வாங்கி படப்பிடிப்பை நடத்தி படத்தை முடிக்கிறார். அதன் பிறகும் வியாபாரத்தில் பல சிக்கல்களை சந்திக்கும் சத்தியமூர்த்தி இறுதியில் படத்தை வெளியிட்டாரா?, இல்லையா? என்பதை திரையுலகில் நடக்கும் மோசடிகளை வெளி உலகத்திற்கு வெளிச்சம் பொட்டு காடும் திரைக்கதை தான் ‘திரையின் மறுபக்கம்’.

கதையின் நாயகனாக திரைப்பட தயாரிப்பாளர் சத்யமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மொஹமத் கவுஸ் மிக இயல்பாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி கச்சிதமாக நடித்து கவர்ந்திருக்கிறார் . வேலை தெரியவில்லை என்றாலும், பொய் மூலமாக வாழ்க்கை என்ற வண்டியை ஓட்டும் இயக்குநர் செந்தில் வேடத்தில் நடித்திருக்கும் நடராஜன் மணிகண்டன், கதபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பதோடு, பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். ஆஸ்கார் குட்டி என்ற பெயருடன் ஆங்கிலப் படங்களை காப்பியடித்து கதை எழுதும், அவருடைய ரஜினி நடித்த 2.0 குறும்பட உருவாக்கம் திரையில் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை எச்சரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹேமா ஜெனிலியா, எளிமையாக இருந்தாலும் இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.மொஹமத் கவுஸ், நடராஜன் மணிகண்டன் மற்றும் ஹேமா ஜெனிலியா ஆகியோரை சினிமாவில் உலா வரும் ஏமாற்றுக்காரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

சிறு வேடத்தில் நடித்து, கதை எழுதி இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பணிகளோடு படத்தை தயாரிக்கவும் செய்திருக்கும் நிதின் சாம்சன், இதுவரை சொல்லப்படாத திரையுலகின் இருட்டு பக்கங்களை இப்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.இசையமைப்பாளர் அனில் நலன் சக்கரவர்த்தியின் இசையும், நிதின் சாம்சனின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

சினிமாவை பற்றி சரியாக தெரியாமல், வெறும் ஆசையோடு அத்துறையில் தயாரிப்பாளர்களாக நுழைபவர்கள், எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திப்பார்கள், அவர்களை யார் யார், எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை மிக விவரமாக சொல்லி எச்சரித்திருக்கும் இயக்குநர் நிதின் சாம்சன், அதை நகைச்சுவையாக சொல்லி (விழிப்புணர்வு ஏற்படுத்தி சிந்திக்கவும் )நம்மை சிரித்து ரசிக்கவும் வைத்திருக்கிறார்.

  • G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
  • நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
  • “Getting to Portray a Character with Emotional Depth Is a Boon for an Upcoming Artiste Like Me” – Actress Vijayalakshmi Veeramani on ‘Enna Vilai’
  • உணர்வுகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற வளர்ந்து வரும் கலைஞருக்கு கிடைத்த வரம்”… ‘என்ன விலை’ திரைப்படம் குறித்து நடிகை விஜயலட்சுமி வீரமணி!
  • அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme