Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம் !

பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம் !

admin October 16, 2023
பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம் !

பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம் !

தமிழ்த்திரைப்படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவரது மகள் கோகிலாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இத்திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் திரையுலகில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் 1990 ல் வெளியான, ‘சந்தனக்காற்று’ படம் மூலம் வில்லனாகத் திரையுலகில் கால்பதித்தவர் விச்சு விஸ்வநாத். வில்லனாக மட்டுமல்லாமல், குணச்சித்திரம், காமெடி எனப் பல படங்களில் ஜொலித்தவர், இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் சுந்தர் சி உடைய நெருங்கிய நண்பரான இவர், அவருடன் 38 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அரண்மனை, கலகலப்பு போன்ற பிரமாண்ட வெற்றிப்படங்களில் இவரது பாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவரது மகள் கோகிலா விஸ்வநாத் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெர்மனியில் பணியாற்றி வரும் ஶ்ரீகாந்த் என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் 23 நவம்பர் அன்று சென்னையில் பிரபலமான திருமண மண்டபத்தில், இருவீட்டார் ஆசியுடன் கோலாகலமாக நடைபெறவுள்ளது. திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு பெற்றோர்களும் மும்முரமாகச் செய்து வருகின்றனர். இத்திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இத்திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தவுள்ளனர்.

பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம் !
பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம் !

Post navigation

Previous Hi Nanna Movie 5 language Theatrical Release On December 7th
Next கவர்ச்சிகரமான மானியங்கள், கண்கவர் இலவச படப்பிடிப்பு தளங்கள் மற்றும் பல வசதிகளுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் மொரிஷியஸ்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

Mr X movie review
  • Movie Review
  • Reviews

Mr X movie review

April 19, 2026
GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை
  • News

GP நிறுவனம் 16 தனித்துவமான பெருங்காயம்  அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சாதனையை

April 19, 2026
Priyambada Yadav — Founder of Kimaya Clinique
  • News

Priyambada Yadav — Founder of Kimaya Clinique

April 19, 2026
*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*
  • News

*ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!*

April 18, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.