Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சந்திரமுகி 2 திரை விமர்சனம்

சந்திரமுகி 2 திரை விமர்சனம்

Posted on September 29, 2023

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தையும் இயக்குனர் பி. வாசுவே இயக்கி இருக்கிறார்.

திரையில் மிரட்டலான விருந்து கொடுத்துள்ளது இந்த “சந்திரமுகி 2 ” காட்டன் மில் ஓனரான ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு குடும்ப பிரச்சனைகள் தொடர்கதையாக உள்ளது அவர்களுக்கு சொந்தமான காட்டன் மில்லில் தீ விபத்து நிகழ்கிறது. ஒரு விபத்தில் ரங்கநாயகியின் இளைய மகளால் (லட்சுமி மேனன்) நடக்க முடியாமல் போகிறது. அவரது மூத்த மகள் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார். தங்கள் குலதெய்வத்தை ரங்கநாயகியின் குடும்பம் மறந்து போனதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக குடும்ப குரு(ராவ் ரமேஷ்) , குல தெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்தால்தான் எல்லா பிரச்சினையும் சரியாகும் என்று சொல்வதைக் கேட்டு சந்திரமுகி பங்களா இருக்கும் ஊருக்கு செல்கின்றனர் ரங்கநாயகி குடுப்பதினார் .

ரங்கநாயகி மகள் வேற்று மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்து பிறந்த குழந்தைகளையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று குடும்ப குரு(ராவ் ரமேஷ்) கூறியதால், அந்தக் குழந்தைக்கு பாதுகாவலராக பாண்டியன் (ராகவா லாரன்ஸ்) அந்த ஊருக்கு வருகின்றனர். சந்திரமுகி பங்களாவின் தற்போதைய ஓனர் முருகேசனிடம் (வடிவேலு) அந்த வீட்டை வாடகைக்கு கொடுக்க, ரங்கநாயகி குடும்பம் வாடகைக்கு எடுத்து தங்கும் அவர்களை, தங்கள் குலதெய்வக் கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுக்கிறார் ஒரிஜினல் சந்திரமுகி (கங்கனா). சந்திரமுகி எதிர்த்து ரங்கநாயகியின் குடும்பம் குலதெய்வம் கோயிலில் பூஜை செய்தார்களா இல்லையா என்பதே சந்திரமுகி 2 படத்தின் திரைக்கதை .

லாரன்ஸின் அறிமுகக் காட்சி. அவர் பராமரிப்பில் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் யாரோ கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர் இதில் வரும் சண்டை காட்சிகள் திரையில் ரசிக்கும் படியாக உள்ளது.

இரண்டாம் பாதியில் சந்திரமுகி ஆவி யார் உடம்பில் உள்ளது என்று சோதிக்கும் பொது லட்சுமி மேனன் நடிப்பு திரையில் மிரட்டுகிறது

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. நடிகர்களின் உடை, அலங்காரம், பின்னணி என அனைத்தும் சிறப்பு ராதிகா, ரவிமரியா, விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ருஷ்டி டாங்கே , மறைந்த நடிகர்கள் மனோ பாலா, ஆர்.எஸ்.சிவாஜியும் நாயகி மஹிமா நம்பியார் , லட்சுமி மேனன் என அணைவரும் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

இயக்குனர் பி. வாசு சந்திரமுகி சம்பந்தமான காட்சிகளில் வேட்டையனையும் சந்திரமுகியையும் (முகி)சந்திரமுகி அருகே அருகே வைத்துக்கொண்டு அவர் எழுதிய டிராமா நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதுதான் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது.

  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme