Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

வெளியீட்டுக்கு பின்னரும் நல்ல அனுபவங்களை கற்றுக்கொடுத்தது நூடுல்ஸ்’” ; இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி பெருமிதம்*

Posted on September 23, 2023

*“

எப்போதாவது அத்திப்பூத்தாற் போல சில படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மனநிறைவு தரும் படங்களாக அமைந்து விடும். அப்படி ஒரு படம் தான் சமீபத்தில் வெளியான ‘நூடுல்ஸ்’. அருவி படம் மூலம் கவனம் ஈர்க்கும் நடிகராக மாறிய மதன் தட்சிணாமூர்த்தி, முதன்முறையாக இயக்கத்திலும் கால் பதித்து இந்த படத்தின் மூலம் ஓர் சிறந்த இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார். இதுநாள் வரை வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஹரீஷ் உத்தமனை இந்த படத்தின் மூலம் அனைவரும் விரும்பி ரசிக்கும் ஒரு குடும்பத் தலைவனாக மாற்றியதே இயக்குனர் மதனுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று சொல்லலாம்.

ஹரீஷ் உத்தமன் மட்டுமல்ல, நாயகி ஷீலா ராஜ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த மதன் தட்சிணாமூர்த்தி வக்கீலாக நடித்திருந்த வசந்த் மாரிமுத்து, மேல் வீட்டுக்காரர் சங்கர் கதாபாத்திரத்தில் நடித்த திருநாவுக்கரசு குழந்தை ஆழியா மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவருமே அந்த கதாபாத்திரங்களாக மாறி நடிப்பில் நூறு சதவீத பங்களிப்பை கொடுத்திருந்தனர். சொல்லப்போனால் படம் பார்க்கும் ஒவ்வொருவருமே அந்த கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்கு அருகிலிருந்து பார்த்து அவர்களின் கஷ்டத்தை நாமே படுவது போல உணர வைக்கும் அளவிற்கு வெகு நேர்த்தியாக இப்படத்தை இயக்கியுள்ளார் மதன் தட்சிணாமூர்த்தி.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா படத்தொகுப்பாளர் சரத்குமார் இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோரின் பங்கும் இன்றியமையாததாக அமைந்து நல்ல சினிமா ரசிகர்களுக்கு நூடுல்ஸ் விருந்தானது எனில் அது மிகையாகாது,.

நூடுல்ஸ் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குநர் மதன் தட்சிணாமூர்த்தி கூறும்போது,

“’நூடுல்ஸ்’ மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் நேர்மையான பாராட்டைப் பெற்றது பெரு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்துள்ள போதிலும் பெரிய படங்களின் வெளியீட்டுக்கு மத்தியில் வரக்கூடிய சிறிய படங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் நூடுல்ஸ் படத்திற்கும் பாதிப்பை கொடுத்தது எனவும்,

ஆயினும் சிறிய படங்களை வெளியிடும் சமயத்தில் நாம் வழக்கத்தை விடவும் கூடுதலாக செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றிய ஒரு நல்ல புரிதல் கிடைக்கப் பெற்றது எனவும் கூறினார்.,

மேலும் நூடுல்ஸ் படத்தை பாராட்டிய சில தயாரிப்பாளர்கள் நூடுல்ஸ் குழுவினரை இதே போன்ற நல்ல படங்கள் செய்யவேண்டும் என வரவேற்று இருப்பது மேலும் மகிழ்ச்சியை தருகிறது எனவும்.,

திரைத்துறையை சேர்ந்த பலரின் பாராட்டுகள் அடுத்த படத்திற்கான பொறுப்பையும் கவனத்தையும் அதிகரித்துள்ளது எனவும்,

இச்சமயத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் ROLLING SOUND PICTURES பிரக்னா அருண் பிரகாஷ், LIME TREE CINEMAS cinemas சுருளிராஜ் மற்றும் V HOUSE PRODUCTIONS தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்” என பெருமிதத்தோடு கூறியுள்ளார்..
.

  • நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
  • Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
  • பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
  • DAC Developers Launches Balmandaisa
  • அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்திற்கான ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையிடலுக்கான முன்பதிவு தொடங்கியது! மேலும், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்படும்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme