Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி திரை விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி திரை விமர்சனம்

Posted on September 9, 2023

நிவின் பாலி ஷெட்டி, அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ திரைப்படம்.

லண்டனில் நட்சத்திர உணவகம் ஒன்றில் சிறந்த மாஸ்டர் செஃபாக இருக்கும் அன்விதா ஷெட்டிக்கு (அனுஷ்கா ஷெட்டி) அவர் அம்மா மட்டுமே துணையாக உள்ளார். அவரும் கேன்சரால் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். தனக்குப் பிறகு தன் மகளுக்கு துணை வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்ள சொல்கிறார். ஆனால், தன் தாய்- தந்தையின் மணமுறிவால் காதல், திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் அனுஷ்கா. தாய் இறந்த பிறகு அவரது அன்பை ஈடுசெய்ய , தான் தாயாக வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் அன்விதா ஷெட்டி . ஆனால், அதற்கு காதல் திருமணம் எதுவும் தேவையில்லை. தன் குழந்தைக்கு தகுதியான நபரின் விந்து தானம் கிடைத்தால் போதும் என முடிவுசெயகிறார் .

தனது தோழியுடன் தனக்கு தகுதியான நபரை தேடும் போது அவரின் எதிர்பார்க்கு ஏற்றபடி சித்து பாலிஷெட்டி (நவீன் பாலிஷெட்டி) ஸ்டாண்டப் காமெடி செய்வதை பார்த்து இவற்தகுதியானவர் என்று அனுஷ்கா அவரிடம் பழகுவதை வைத்து நவீன் அதை காதல் என புரிந்து கொள்ள அனுஷ்கா உண்மையை சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சி ஆகிறார் நவீன். இறுதியில் அனுஷ்காவின் ஆசை நிறைவேறியதா, நவீன் என்ன முடிவெடுத்தார் என்பது தான் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்தின் கதை.
கதையின் வேகத்திற்கு இணையாக ரதன் இசையில் பாடல்களும் ,பின்னணி இசையும் கலர்புல்லான ஒளிப்பதிவில் நீரவ் ஷா ஒளிப்பதிவு.

இதுவரை திரையில் வராத கதையாக விந்து தானம் பெற்று ஒரு குழந்தைக்கு தாயாக நினைக்கும் நாயகியின் கதைக்களத்துடன் ,,நேர்த்தியான காமெடி கலந்த திரைக்கதை அமைப்பில் தரமான படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மகேஷ் பாபு.

  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
  • *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme