Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
நடிகை கங்கனா ரனாவத்திற்கு நடிகை ஜோதிகா பாராட்டு!

நடிகை கங்கனா ரனாவத்திற்கு நடிகை ஜோதிகா பாராட்டு!

Posted on September 8, 2023

September 8, 2023

‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தைப் பாராட்டி, நடிகை ஜோதிகா சமூக ஊடகத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் நட்சத்திர நடிகரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’.

இத்திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். காமெடி ஹாரர் வகைமையில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கும் இத் திரைப்படத்தில், சந்திரமுகி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தின் தோற்றம், கதாபாத்திரம் ஆகியவை குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா, ‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தைப் பாராட்டி சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,

” இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதைக் கண்டு மிகவும் பெருமையடைகிறேன்.

சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கிறீர்கள்.

நான் உங்கள் ரசிகை. இந்தத் திரைப்படத்தில் உங்களின் நடிப்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி. வாசு சாருக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

  • நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
  • Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
  • பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
  • DAC Developers Launches Balmandaisa
  • அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்திற்கான ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையிடலுக்கான முன்பதிவு தொடங்கியது! மேலும், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்படும்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme