Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • கிருஷ்ணா – ஈடன் நடிக்கும் முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படம் ” பல்லவபுரம் மனை எண் 666 ” ரிஷி இயக்குகியுள்ளார்.

கிருஷ்ணா – ஈடன் நடிக்கும் முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படம் ” பல்லவபுரம் மனை எண் 666 ” ரிஷி இயக்குகியுள்ளார்.

admin August 20, 2023
அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படம் " பல்லவபுரம் மனை எண் 666 "

அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படம் " பல்லவபுரம் மனை எண் 666 "

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷி.

ஈரம், அனந்தபுரத்து வீடு, அழகிய அசுரா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ஆண்டவ பெருமாள், இருக்கு ஆனா இல்ல, பனிவிழும் நிலவு, திரைக்கு வராத கதை, ழகரம், துரிதம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த ஈடன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் ரேகா சுரேஷ், சுனில், மாலா, நேகா, ரக்ஷை, ஸ்ரீஜித், ராம்கி, சுதந்திரம், சோலை ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வில்லாலன்
இசை – மாருதி நம்பி
பாடல்கள் – முத்துபாரதி, சிந்துநதி பூ செந்தமிழன்
எடிட்டிங் – R.T. அண்ணாதுரை
நடனம் – சம்பத்ராஜ்
மக்கள் தொடர்பு – மணவை புவன்.
தயாரிப்பு மேற்பார்வை – சாலைப்பட்டி N.P. மனோகரன்.
Vfx – ரக்ஷய்
தயாரிப்பு – அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்.
கதை – S.முத்துபழனியப்பன்

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் K. பாலசந்தந்தரிடம் உதவி இயக்குனரா பணியாற்றிய ரிஷி.

படம் பற்றி இயக்குனர் ரிஷி பேசியதாவது…

வெளிநாட்டில் பணிபுரியும் தருண் (கிருஷ்ணா). அவனது மனைவி இறந்த பிறகு, தனது 6 வயது குழந்தை ஜனனியை (நேகா) கவனித்துக்கொள்ள, சினேகாவை (ஈடன்) திருமணம் செய்து கொண்டான். ஆனால் ஜனனி, சினேகாவை தன் தாயாக கருதாமல், சித்தியாகவே பாவிக்கிறாள். ஜனனி தன் தோட்டத்தில் இருந்த ரோஜா பூவுடன் உறவை வளர்த்து, அதை தன் தாயாக கருதி, அந்த ரோஜாவை அம்மா என்று அழைக்கிறாள். அந்த ரோஜா, ஓர் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. ஜனனி ரோஜாவின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள், அந்த ரோஜாவும், ஜனனியை தன் மகளாகவே கருதியது. ஒரு தாயாக, அனைத்து இன்பங்களையும், அரவணைப்பையும் ஜனனிக்கு கொடுக்கிறது. தன் மகளை பார்க்க தருண் சென்னைக்கு வருகிறான். அவன் தனது வீட்டிற்கு வந்தது முதல், பல்வேறு அசாதாரண நிகழ்வுகளையும், துன்பங்களையும், அந்த ரோஜா பூவில் உள்ள ஆன்மாவால் அனுபவிக்கிறான்.

ஏன் ஜனனி மீது அன்பு செலுத்தும் ஆன்மா, அவள் தந்தையை பழி வாங்க துடிக்கிறது? தருண் என்ன தவறு செய்தான்? தருண் அந்த ஆன்மாவிடமிருந்து தப்பிப்பிழைத்தானா? இக்கேள்விகளுக்கான விடையே ‘பல்லவபுரம் மனை எண் 666’ திரைப்படம்.

இத்திரைப்படத்தை தமிழகமெங்கும் ‘ஶ்ரீ பஞ்சாட்சரம் ஃபிலிம் மேகர்ஸ்’ வெளியிடுகிறார்கள்.

Post navigation

Previous முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் ” லாக் டவுன் நைட்ஸ் ” ( Lock Down Nights ) S.S.ஸ்டான்லி இயக்யிருக்கிறார்.
Next ‘அட்டு’ திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்காவின் தயாரிப்பில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.