Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

விக்ராந்த் – மெஹ்ரீன் பிர்ஸாதா மற்றும் ருக்ஷார் தில்லான் நடித்துள்ள ‘ஸ்பார்க் லைஃப்’ எனும் திரைப்படத்தின் டீசர் ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று வெளியாகும் என சுவாரசியமான போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted on August 3, 2023

‘ஸ்பார்க் லைஃப்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து பார்வையாளர்களிடத்தில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இப்படத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்ஸாதா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை பற்றிய ஒரு அற்புதமான அப்டேட்டை சுவராசியமான போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 6:45 மணிக்கு வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் கையில் முகமுடியுடன் அர்த்தமுள்ள அவதாரத்தில் விக்ராந்த் காணப்படுகிறார். அழுத்தமான கருப்பு வண்ண பின்னணியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர், அனைவரின் கண்களையும் கவர்ந்துள்ளது.

இந்த திரைப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இதன் டீசருக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இதில் மெஹ்ரீன் பிர்ஸாதா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற F3 எனும் படத்தில் தனது வசீகரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான இந்த படத்தின் மூலம் விக்ராந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை இயக்கி, தயாரித்து வருகிறது. ‘ஹிருதயம்’ புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இந்த தனித்துவம் மிக்க த்ரில்லர் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் படைப்புகள், உயர்தரத்துடன் சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படைப்பாளிகள்- தரத்திலோ… உள்ளடக்கத்திலோ… எந்த சமரசமும் இல்லாமல் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் நாசர், சுகாசினி மணிரத்னம், வெண்ணலா கிஷோர், சத்யா, ஸ்ரீகாந்த், கிரண் ஐயங்கார், அன்னபூர்ணமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

  • *Kavya Film Company Announces ‘Production No. 12’ with Sarath Kumar on His Birthday
  • சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
  • Chennais Amirta Signs Four International MoUs to Strengthen Global Education, Internship & Employability
  • உலகளாவிய கல்வி, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வலுப்படுத்தும் வகையில் சென்னைஸ் அமிர்தா நான்கு சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது
  • ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme