Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பீட்சா 3 திரை விமர்சனம்

பீட்சா 3 திரை விமர்சனம்

Posted on July 29, 2023

திருக் குமரன் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் மோகன் கோவிந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் பீட்சா -3. அஸ்வின் காகுமனு உணவகம் வைத்து நடத்தும் நலனுக்கு (அஸ்வின்) அமானுஷ்யமான சில விஷங்களை தனது உணவகத்தில் பார்க்கிறார். மற்றும் தொடர்ந்து கொலைகள் நடக்க இந்த கொலைக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக உணர்கிறார் நலன் மற்றும் தொடர்கொலை மீதான குற்றம் நலன் மீது விழுகிறது.தொடர் கொலைகளுக்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறார் நலன் இதுவாவே பீட்சா 3 திரைப்படத்தின் கதை.

சென்னையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர் அனுபமா குமாரும், அவரது மகள் அபி நக்ஷத்ராவும். தனது அம்மாவின் ஸ்வீட் கடைக்கு துணையாக இருக்கும் அபிக்கு எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பந்து முகத்தில் அடித்து நிலைதடுமாறி விழும் அவருக்கு தலையில் அடிபடுகிறது அந்தநாள் மறதி பிரச்னை ஏற்படுகிறது. அபி நக்ஷத்ராவுக்கு 10 நிமிடத்திற்கு ஒருமுறை மறதி ஏற்படும் அபியை குடியிருப்பு வளாகத்தின்செக்யூரிட்டி மற்றும் செயலாளர் நடிகர் கவிதா பாரதியும். இன்னும் மூவரும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குகின்றனர். அது அவரது தாயாருக்கு தெரிய வர இருவரையும் அனுபமாவின் ஸ்வீட் கடையில் வைத்து கொலை செய்து விடுகின்றனர். இந்நிலையில் அனுபமாவின் ஸ்வீட் கடையில் புதிய உணவகத்தை தொடங்கும் அஸ்வின் அங்கு அலையும் பேய்களால் பாதிக்கப்படுகிறார்.

தமிழ் சினிமாவில் பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை எந்தளவு சுவாரஸ்யமாக திரையில் ரசிக்கும் படியாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் , முழுப் படத்தையும் தாங்க வேண்டிய பொறுப்பை அஸ்வினிடம் ஒப்படைத்திருக்கும் இயக்குநரின் துணிச்சல் பாராட்டக்குறியது . இதற்கிடையில் பேய்களுடன் பேச ஆஃப் தயாரிக்கும் கதாநாயகி, தங்கையின் காதலைத் தடுக்கும் காவல் அதிகாரி அண்ணன் ஆகியோர் கதையை தங்கள் பங்குக்கு இன்னொரு பக்கம் இழுக்கின்றனர்,பிரபு ராகவ் ஒளிப்பதிவு பேய்ப் படங்களுக்கே உரிய லைட்டிங்கில் வித்தியாசம் கொடுத்து ரசிக்க விசைத்துள்ளார் . அருண் ராஜ் பின்னணி இசையும் பரபரப்பைக் கூட்டுகிறது.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme