Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
லவ் திரை விமர்சனம்

லவ் திரை விமர்சனம்

Posted on July 28, 2023

அன்பு மனித இனத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படத்தின் மூலம் இயக்குனர் திரையில் தெளிவாக சொல்லியுள்ளார்,மலையாளத்தில் ஷைன் டாம் சாக்கோ, ரஜிஷா விஜயன் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றத் திரைப்படம் லவ் திரைப்படத்தில் பரத் – வாணி போஜன் தம்பதி இடையே அடிக்கடி சண்டை நடக்கிறது எதிர்பாராத விதமாக சண்டை உச்சத்தை அடையும்போது வாணி போஜன் தலையில் அடிபட்டு இறந்து விடுவதாக திரையில் காட்டப்படுகிறது . மனைவி பிணத்தை வீட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு நாயகன் (அஜய் )பரத் எஸ்கேப் ஆக நினைக்க, வீட்டுக்கு வெளியே வாணி போஜன் உயிருடன் நிற்கிறார். பிணமாக இருக்கும் நாயகி (திவ்யா )வாணி போஜன் நிஜமா அல்லது உயிருடன் வந்து நிற்கும் வாணி போஜன் நிஜமா என்ற குழப்பத்திற்கான விடை தான் ‘லவ்’ திரைப்படம் .

மலையாள ‘லவ்’ படத்தின் மையகதை உள்வாங்கிய இயக்குநர் ஒளிப்பதிவு, பின்னணி இசை, நடிப்பு என எல்லா இடங்களில் நல்ல வேலை வாங்கியிருப்பது தெரிகிறது. முக்கியமாக, அஜய் திவ்யா சண்டைக்காட்சியை ஸ்லோமோஷனாக திரையில் பார்ப்பதற்கு சிறப்பக உள்ளது. தமிழுக்கு ஏற்றதுப்போன்ற வசன மாற்றங்கள் படத்திற்கு பக்கபலமாக உள்ளது (நாயகன் அஜய்) பரத், வாணி போஜனின் நடிப்பு கணவன் மனைவிக்குள் நிகழும் சண்டை எதார்த்தமாக உள்ளது . விவேக் பிரசன்னா, டேனியல் ஆகியோரின் நடிப்பும் சிறப்பு .

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் முழு கதையும் அமைத்திருந்தாலும் வெவ்வேறு கோணங்களில் காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டியிருகிறார்.

ரோனி ரெபலின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பு
எழுதி இயக்கியிருக்கும் ஆர்.பி.பாலா, ஒரு வீட்டுக்குள் நடக்கும் க்ரைஸ் சஸ்பென்ஸ் ஜானர் கதைக்களத்தை எந்தவித சஸ்பென்ஸும், விறுவிறுப்பும் இல்லமால் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்

  • *Kavya Film Company Announces ‘Production No. 12’ with Sarath Kumar on His Birthday
  • சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
  • Chennais Amirta Signs Four International MoUs to Strengthen Global Education, Internship & Employability
  • உலகளாவிய கல்வி, பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வலுப்படுத்தும் வகையில் சென்னைஸ் அமிர்தா நான்கு சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது
  • ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme