Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு!

தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு!

Posted on July 24, 2023

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்குப் முன்பு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள அரிசியின் விலையானது, தற்போது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.

25 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

தரமான முதல் ரக சாப்பாட்டு அரிசி 25 கிலோ மூட்டை கடந்த மாதத்தில் ரூ.1,400 ஆக இருந்த நிலையில், அவை தற்போது ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200-ல் இருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது. இதே போல இட்லி அரிசியும் 25 கிலோ மூட்டை ரூ.850-ல் இருந்து ரூ.950 ஆக உயர்ந்துள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளது மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாகவே அரிசி விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மதுரையில் அரிசி விலை கிலோவுக்கு 8ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
நாட்டு பொன்னி ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 55 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடக பொன்னி விலை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் உயர்ந்து கிலோ 42 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக விற்கப்படுகிறது.

பிரியாணி அரிசி ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்ட நிலையில் தற்போது 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பச்சரிசி விலை ஒரு கிலோவிற்கு 12 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ பச்சரிசி 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக விற்கப்படுகிறது. பச்சரிசி குருணை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் அதிகரித்து, 25 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • 33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
  • நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்- Cold Call’ படத்தின் முன்னோட்டம்
  • அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme