Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
கொலை திரை விமர்சனம்

கொலை திரை விமர்சனம்

Posted on July 22, 2023

நடிகர்கள்: விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சம்கித் போஹ்ரா.
எழுதி இயக்கியவர்: பாலாஜி கே குமார்

தயாரிப்பு: இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்கள்: கமல் போரா, பங்கஜ் போரா, லலிதா தனஞ்சயன், ஆர்.வி.எஸ்.அசோக்குமார், டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, பி.பிரதீப், விக்ரம் குமார் எஸ், சித்தார்த்தா ஷங்கர்
ஒளிப்பதிவு இயக்குனர்: சிவகுமார் விஜயன்

இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

படத் தொகுப்பாளர்: செல்வா ஆர்.கே

கலை இயக்குனர்: கே ஆறுசாமி

ஒலி வடிவமைப்பு: விஜய் ரத்தினம்

மறுபதிவு கலவை: ஏ எம் ரஹ்மத்துல்லா

ஏகுஓ மேற்பார்வையாளர்: ரமேஷ் ஆச்சார்யா

ஆடை வடிவமைப்பாளர்: ஷிமோனா ஸ்டாலின்

பிஆர்ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா டிஒன்

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராஃபிட் நிறுவனம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “கொலை”. இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படம் மர்டர்-மிஸ்டரி த்ரில்லர் திரைப்படம்.

தமிழ் இயக்குனர் ஹாலிவுட் தரத்தில் ஒரு மர்டர்-மிஸ்டரி த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளார் கொலை படத்தின் இயக்குநர் பாலாஜி K. குமார், கதையில் பாடகியும் பிரபல மாடலுமான லைலா பூட்டப்பட்ட தன் வீட்டிற்குள் கழுத்து நெரிக்கபட்ட நிலையில் கொல்லப்பட்டு கிடக்கிறாள். அல்லாவை (மீனாக்ஷி சேஷாத்ரி)கொன்றது யார் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் படம் தான் இந்த கொலை.

பாலாஜி குமாரின் தெளிவான திரைக்கதையால் நிமிர்ந்து நிற்கிறது இந்த படம்.பிரபலமான என்கவுண்டர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று இருப்பவர் விஜய் ஆண்டனி. தனது மகளுடன் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விபத்து ஏற்பட அதில் அவரது மகள் சுயநினைவு இழப்பு ஏற்படுகிறது இதனால் தனது போலீஸ் தொழிலை வெறுக்கிறார். பாடகியும் பிரபல மாடலுமான லைலா கொலையை விசாரிக்க முதல் வழக்காக ரித்திகா சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது காவல்துறை அதற்கு அவருக்கு சிபாரிசாக விஜய் ஆண்டனி இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லா.ரித்திகா சிங்கின் முதல் வழக்காகவும் காவல்துறையினரால் அவருக்கு ஏற்படும் இன்னல்கள்(சுழிய்ச்சி) புரிந்து கொண்டு தானே முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கிறார் விஜய் ஆண்டனி.கதாபாத்திரங்களின் மனப்போராட்டத்தை கிராபிக்ஸ் காட்சிகளாக காட்டி இருப்பது ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப ஒளிப்பதிவு அருமை.

திரைக்கதையில் அத்தனை கேரக்டர்களும் மெதுவாக பேசுவதும் காட்சிகள் மெதுவாக நகர்வதையும் தவிர்த்திருக்கலாம். லைலா மர்ம கொலையில் விசாரணை தொடங்கும் முன்பே திரைக்கதை சுவாரஸ்யத்தை குறைத்தாலும் குற்றவாளி யார் என்பதை யூகிக்க முடியாமல் திரைக்கதை அமைத்து இருப்பதும் அடுத்தடுத்து புதுப்புது கேரக்டரை அறிமுகப்படுத்துவதும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது
படத்தின் பெரிய பலம் சிவகுமார் விஜயனின் கண்களைக் கவரும் ஒளிப்பதிவு. கதைக்களத்திற்கு ஏற்ற சிந்தனை காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியுள்ளார். சிவகுமார் விஜயன் படம்பிடித்த காட்சிகளை எடிட்டர் செல்வா ஆர்கே திறமையான கைத்திறன் மூலம் கூடுதலாக மெருகேற்றி பார்வையாளர்களை சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி உலகிற்குள் ஆழ்த்தியுள்ளார்.கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கும் வசீகரமான இசை, ஒட்டுமொத்த சினிமா அனுபவத்தை மேம்படுத்துகிறது.

ராதிகா சரத்குமாரின் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் அவருக்கு அமையவில்லை ,ஜான் விஜய், முரளி சர்மா, கிஷோர் குமார், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சம்கித் போஹ்ரா உட்பட அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர்.

  • தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும்
  • *இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி?
  • முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய் விட்டாயா???
  • ஆழ்ந்த இரங்கல்களை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.- சீனு ராமசாமி.
  • தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு – இரங்கல் அறிக்கை
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme