Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
20 மில்லியன் பார்வைகளை கடந்த ஜெயிலர் ‘காவாலா’ லிரிக் வீடியோ

20 மில்லியன் பார்வைகளை கடந்த ஜெயிலர் ‘காவாலா’ லிரிக் வீடியோ

Posted on July 11, 2023

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் இது.

பான் இந்தியா வெளியீடாக தயாராகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் என பிற மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தமன்னா நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பேட்ட, தர்பார் என சூப்பர்ஸ்டார் ரஜினியின் முந்தைய இரண்டு படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி மாலை இந்த படத்தில் இருந்து ‘காவாலா’ என்கிற லிரிக் பாடல் வெளியானது. வெளியாகி மூன்று நாட்களே ஆன நிலையில் கிட்டத்தட்ட 20 மில்லியன் பார்வையாளர்கள் யூட்யூப்பில் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர்.

அது மட்டுமல்ல spotify-யில் இந்த பாடல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை பெற்றுள்ளது.

அனிருத்தின் அதிரடி இசை, அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகள், பாடகி ஷில்பா ராவின் காந்தக் குரல், தமன்னாவின் நளினமான நடனம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிக்னேச்சர் ஸ்டைல், ஜானி மாஸ்டரின் நடன வடிவமைப்பு என எல்லாமாக சேர்ந்து இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.

  • வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி
  • AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்: திரைத்துறைக்கான புதிய தொடக்கம் !!
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!
  • கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme