Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு

Posted on June 29, 2023

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே. எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியன்று‌ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியிருக்கும் இந்த ‘சந்திரமுகி 2’ படத்திற்கும், பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Thee Kural exciting is the opportunity it creates for emerging voices to bring their own realities, perspectives and identities to the forefront
  • நூறு கோடி வானவில் ZEE5 ஓடிடி இணைத்தொடர் விமர்சனம்
  • பிரபுதேவா – வடிவேலு இணைந்து கலக்கும் ‘பேங் பேங் – Bang Bang’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
  • SAMANTHA RUTH PRABHU MOVED TO TEARS AS CELEBRITY MASTERCHEF TAMIL CONTESTANTS SURPRISE HER WITH HEARTFELT GIFTS AND MEMORIES!
  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme